உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

101

அந்திபோலஸின் பணியாளாகிய துரோமியோவும் அதிரியானாவின் பணிப்பெண் ஒருத்தியை விரும்பி மணஞ் செய்துகொண்டு, அவளுடனேயே வாழ்ந்து வந்தான்.

மூத்த அந்திபோலஸ் இங்ஙனம் எபீஸஸில் நல் வாழ்வுடையவனாயிருப்பது ஸைரக்கூஸ் நகரிலிருக்கும் அவன் தந்தையாகிய ஈஜியனுக்கும், இளைய அந்திபோலஸுக்கும் தெரியாது. ஆகவே அவர்கள் அவனைப் பற்றிக் கவலைகொண்டு அவனை என்ற காண்போமோ என்று தனித்தனியாக ஏங்கியிருந்தனர்.

பல ஆண்டுகள் இங்ஙனம் கழிந்தும் அண்ணனைப் பற்றிய செய்தி எதுவும் தெரியாதது கண்டு இளைய அந்திபோலஸ் தந்தையை அணுகி, “அப்பா, இன்னும் நாம் வாளா இருப்பது நன்றன்று; நானாவது போய் அம்மையையும் அண்ணனையும் தேடி வருகிறேன்” என்றான்.

ஈஜியனுக்கும் உண்மையில் மனைவியைப் பற்றியும் மகனைப் பற்றியும் கவலை உண்டு. ஆயினும், அவர்களைத் தேடத் தன் இளைய மகனை அனுப்பினால் எங்கே இவனையும் இழக்க வேண்டி வந்துவிடுமோ என்ற அஞ்சினான். எனினும், வேறு வழியின்றி அவன் அவர்களைத் தேடும்படி

அனுப்பத் துணிந்தான்.

ளைஞனை

இளைய அந்திபோலஸ் இளைய துரோமியோவையும், உடன்கொண்டு பல இடங்களுக்குச் சென்று தன் உடன் பிறந்தானையும் நாயையும் தேடியலைந்து கடைசியாக எபீஸஸ் நகரம் வந்து சேர்ந்தான். அந்நகருக்கும் ஸைரக்கூஸிற்கும் நெடுநாள் பகைமை உண்டு என்பதை அவன் அறிவானதலால். தானும் பணியாளும் வேற்று நகரத்தாராக உருமாறி உட்சென்றனர். சென்று எங்குஞ் சுற்றி ஓய்வுற்று, அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி இளைப்பாறினர்.

முதலில் மனைவியையும்

ஒரு பிள்ளையையும் இழந்ததனால் ஒரு கண்ணும் கையும் இழந்தவன் போன்றிருந்த ஈஜியன், எஞ்சிய கண்ணும் கையுமாய் அமைந்த மகனையும் பிரிய நேர்ந்ததினால் மிகவும் மனமுடைந்தான். ஆனால், எப்படியும் அவ்விளையோன் அவ்விளையோன் முன் இழந்த

ளைய