உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

103

ஆம்பிட்ரைட் அதனால் பெருஞ்சினங்கொண்டாள். ஒருநாள் அவள் சில்லா குளித்துக்கொண்டிருந்த சுனையருகே வந்தாள். சில்லா திரும்பிப்பாராமல் குளித்துக் கொண்டிருக்கவே தன் கையிலுள்ள சில பச்சிலைகளை ஆம்பிட்ரைட் அச்சுனைநீரில் போட்டாள். உடனே சில்லா பெரிய கடல் பூதமாகிவிட்டாள்.

சில்லாவின் கால்கள் தந்தம்போல் கடைந்தெடுத்த கால்கள் என்று நெப்டியூன் அன்புடன் பாராட்டியிருந்தான். எனவே, ஆம்பிட்ரைட், அப்பூதத்துக்குப் பன்னிரண்டு கோணலான கால்களைக் கொடுத்துவிட்டாள். ஒடுங்கி நீண்டகழுத்துகளுடன் ஆறு தலைகள் ஏற்படும்படியும் சபித்துவிட்டாள். நெப்டியூன் சில்லாவின் குரல் இனிமையைப் பெரிதும் பாராட்டியிருந்த படியால், பூதமாக மாறிய சில்லாவுக்குக் குரைக்கும் நாயின் ஊளை ஒலியை அவள் கொடுத்துவிட்டாள்.

தன் இழிந்த கோலத்தைக் கண்ட சில்லா உள்ளம் வெம்பி, வெட்கி, ஒருவரும் வரமுடியாத ஒரு பாறையில் இருந்த குகையில் குடிபுகுந்தாள். அப்பாறை இன்றும் சில்லா என்றே கூறப்படுகிறது.

அங்கு வாழ்ந்த சில்லா காலப்போக்கில் தன் மென்மையான இயல்புகளை இழந்துவிட்டாள்; அவள் பெற்ற உருவத்துக் கேற்பக் கொடிய உள்ளமும் பொல்லாத பண்பும் படைத்தவ ளானாள். அவ்வழியே சென்ற கப்பல்கள்மீது பாய்ந்து தாக்கி உடைத்து மாலுமிகளை விழுங்கிவந்தாள்.

கடலில் மரக்கலங்கள் உடைந்து மாலுமிகள் உயிரிழப்ப தற்கு, கிரேக்கர்கள் இதையே காரணமாகக் காட்டிவந்தார்கள். ன்றுங்கூடயாராவது அப்பாறை அருகில் சென்றால் உயிரிழக்க வேண்டியவர்கள் தான். ஆனால், நாம் இப்போது ஆள் விழுங்கும் சில்லா என்னும் பூதம் இருப்பதை நம்புவதில்லை. நீருக்கடியில் மறைந்து கிடக்கும் பாறைகளும், குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் உள் நீரோட்டங்களும் கப்பல்களை உடைப்பதற்குப் போதும் என்பது நமக்குத் தெரியும்; அதற்கு ஒரு சில்லா தேவையில்லை.

ஒருநாள் நெப்டியூனுக்கும் அத்தீனி என்னும் தெய்வத்துக்கும் ஒரு நகரத்தின் பெயர் குறித்து வழக்கு