உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

||_ _

அப்பாத்துரையம் - 40

நீ இதுவரையில் செய்த உதவிகளெல்லாம் போதாது; இப்போது எப்பாடு பட்டாயினும், தப்ப உதவி செய்தாக வேண்டும்," என்று கெஞ்சினான்.

மீடியாவின் காதலில் களங்கமில்லை. அவள் அதன் உறுதியைக் காட்டினாள்; அதற்காக எதையும் துறக்க முன்வந்தாள். ஆனால், அவள் உறுதி எவர் நெஞ்சையும் திடுக்குற வைக்கத்தக்கதாயிருந்தது. தான் உயிருக்குயிராய் நேசித்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை அவள் உடன்தானே கொன்று, அவன் உடலைத் துண்டு துண்டாகக் கிழித்து, தந்தையின் கப்பல் அணுகுந்தோறும் அவன் முன் ஒரு துண்டை எறிந்தாள். அப்ஸிர்ட்டஸிடம் மீடியாவைவிட மிகுதியாக உயிர் வைத்திருந்தவன் அயதிஸ். ஆகவே, அவன் இறந்த உடலின் துண்டைக் கண்முன் கண்டதும், கப்பலைச் சற்று நிறுத்தி அதை எடுத்து வைத்துக்கொண்டு பின்தொடரும் வேகம் குறையவே ஜேஸன் தப்பியோட முடிந்தது.

புலம்பினான். இதனால்

திரும்பிவரும் பயணம் மாதக் கணக்காக நீண்டது. இடையூறுகளும் பல ஏற்பட்டன. ஆனால், ஜேஸனின் வீரமும் மீடியாவின் மாயத் திறமையும் அவர்களைக் காத்தன. கடைசியில் அவர்கள் இயோல்கஸ் வந்து சேர்ந்தனர்.

கொடுங்கோலன் பீலியஸ் இதற்குள் ஜேஸனின் தந்தையைக் கொன்றுவிட்டான். அத்துடன் பொன் மறியின் கம்பிளியைக் கொண்டுவந்தபின்னும் ஜேஸன் கோரிய வண்ணம் முறைப்படி அரசுரிமையை அவனுக்குத் தர மறுத்துவிட்டான். ஜேஸன் மனம் மீண்டும் சோர்வுற்றது. ஆனால், மீடியா பீலியஸை ஒழிக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டாள்.

பீலியஸ் இப்போது கிழவனாயிருந்தான். தான் அரிதிற் பெற்ற ஆட்சியை நீடித்து ஆள இப்போது இளைஞனாயிருந்தால் எவ்வளவு நல்லது என்று அவன் அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வான். தன் மாயத்தால் இதை அறிந்த மீடியா, அவன் புதல்வியரிடம் சென்று, 'உங்கள் தந்தையை என்னால் ளைஞனாக்க முடியும்,' என்றாள்.

இதை மெய்ப்பிப்பவள்போல அவள் ஒரு கிழ ஆட்டைத் துண்டு துண்டாக்கி ஒரு மருந்து கலந்து மிடாவிலிட்டுக்கொதிக்க