இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146
அப்பாத்துரையம் 40
-
பொன்மயமான ஒரு விமானம் அச்சமயம் அவன் மீதமாகப் பறந்து சென்றது. அதில் இருந்த ஓர் அழகிய பெண்ணுருவம் பேய்ச்சிரிப்புச் சிரித்துக்கொண்டு அதேன்ஸ் நகர் நோக்கிச் சென்றது. அந்த உருவம் தான் மீடியா.
ஜேஸனுடனும் வாழமுடியாமல், தாயகமும் செல்ல விரும்பாமல், மீடியா அதேன்ஸைத் தன் இருப்பிடமாக்கினாள். ஆனால், இங்கே அவள் மனித உருவில் அமரவில்லை. தெய்வமாகிச் சிலை வடிவில் இடம் பெற்றாள். தன் மாயத்தை எல்லாம் அவள் அதேன்ஸின் கலைமாயமாக்கினாள்.