உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

அப்பாத்துரையம் 40

-

அன்றுதான் சாபம் நீங்கும் என்றும் அவள் மந்திரம் போட்டிருந்தாள்.

காணாமற்போன தன் மகனைக் காணக் கிடைத்த அரசி அவன் தோளில் முத்தமிட்டுவிட்டாள். முதல் நாளே அவ்வூர்க் கோழிகள் அத்தனையும் கொல்லப்பட்டு விட்டபடியால், சாபம் தொலைந்தது. இளவரசன் இயற்கை நிலைமையை அடைந்து விட்டான். தன் செல்வக் குழந்தையையும், ஆருயிர் மனைவியை யும், அன்புக்குரிய தாயாரையும் ஒருங்கே பெறக் கொடுத்து வைத்த இளவரசனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். மீனாளின் மகிழ்ச்சிக்கு அளவு உண்டா என்ன! அன்று முதல் அவள் அல்லல் எல்லாம் தீர்ந்து விட்டது.

தங்கள் தங்கை மறுபடியும் அரச வாழ்வு அடைந்து விட்டதைச் சூனியக்காரி வாயிலாக அறிந்த பொன்னம்மையும், சின்னம்மையும் சிறிதும் வெட்கமின்றி மீனாளிடம் உறவு கொண்டாட வந்தனர். ஆனால், அந்தத் தடவை அவர்கள் பாசாங்கு பலிக்கவில்லை, அவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து விடும்படி இளவரசன் கட்டளையிட்டு விட்டான்.

மீனாளும், இளவரசனும் நெடுநாள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து அந்நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் குழந்தை அழகும் வீரமும் மிக்க இளவரசனாக சிறப்புடன் வளர்ந்து வந்தான்.