உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

213

விடலாம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஆனால், திடுமென்று ஒரு பெரிய உருவம் மரங்களுக்கிடையே தோன்றிற்று. திரண்டு பருத்த அதன் கைகள் முழுவதும் மயிர் படர்ந்த குரங்கின் கைகளைப்போல் இருந்தன. கண்கள் இரண்டுக்கும் பதிலாக நெற்றியில் மட்டும் ஒரு விழி இருந்தது. அவ்வுருவத்தைப் பார்த்தாளோ, இல்லையோ தேன்மொழி உடல் நடுங்கி, மெய்மறந்து, வாய் குழறி "ஐயோ,அம்மா, என்னைக் காப்பாற்று' என்று உரக்கக் கத்திவிட்டாள். பாதாளவயிரன் அதைக் கேட்டு அவளை நெருங்கி வந்தான். அவளைக் கண்டதுமே அவனுக்கு உடனடியாக அவளைத் தின்று விட வேண்டுமென்ற ஆசைதான் ஏற்பட்டது. ஆயினும், பூங்கொடி போன்ற அந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட சாவா என்று சிறிது தயக்கமும் இருந்தது. மேலும் அவள் உடல் பருமன் அவனுக்கு ஒரு வாய் உருண்டைக்கே பற்றாது. சற்றுக் கொழுக்க வைத்துப் பின்னர் சாப்பிடலாம் என்றும், அதுவரையில் அவளைத் தன் வீட்டிலேயே வளர்த்துப் பணிப்பெண்ணாக வைத்துக் கொள்வது என்றும் அவன் மனதில் முடிவுசெய்து கொண்டான்.

பூதம் மனதில் செய்த முடிவு அவளுக்கு எப்படித் தெரியும்? எனவே முதலில் அவளுக்கு ஏற்பட்ட அச்சத்தை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல, அவன் அவளிடம் அன்பாய் நடந்துகொள்வதை (அவள் தமக்கையர் எப்போதும் நடத்துவதைவிட மிகவும் அன்பாகவே நடத்தி வருவதை) உணர்ந்து, மனம் தேறி, அவன் சொன்ன வேலைகளை மனங்கோணாமல் உவப்போடு செய்து வந்தாள். எப்போதும் சிரிப்பும், களிப்புமாகவே அவள் காலம் கழிந்து வந்தது.

அப்படி இருக்கையில் ஒரு நாள் காலையில், தேன்மொழி பலகணியின் பக்கம் நின்று கொண்டு தன் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இளவரசன் வளர்க்கும் கிளி ஒன்று அங்கே பறந்துவந்து பலகணிக் கம்பையில் அமர்ந்துகொண்டது. “ஐயையோ பேதைப் பெண்ணே

பாதாள வயிரனுக்கா உணவாகிறாய்”