உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230 |__

அப்பாத்துரையம் – 40

அவர்கள் இரண்டோரடி எடுத்து வைப்பதற்குள் அப் பறவை மறுபடியும் அவ்வாறே பாடிற்று. மறுபடியும் அவ்வூராளி அவர்களை மீண்டும் நிற்கவைத்து அவர்கள் உடைகளைத் தானே சீலைப்பேன் பார்ப்பது போல் வைத்த கண் வைத்தபடியே இடம்விடாமல் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். பார்த்தும் அவன் கைக்குங் கண்ணுக்கும் மாணிக்கம் அகப்படாததனால் அவர்களை மறுபடியும் போகவிட்டான். அவர்கள் முகந் திரும்பினார்களோ இல்லையோ உடனே அப்பறவை அவ்வாறாகவே பெருங்குரலோடு பாடிற்று. அவர்களை அவ்வூராளி போகவொட்டாமற் றடுத்து அவர்களை நோக்கி, "பாட்டை சாரிகளே! இப்பறவை எப்போதும் பொய்ப்பாட்டுப் பாடுவதில்லை. உண்மையையே பாடும். உங்களிடம் மாணிக்கம் உண்டென்று முக்காலுஞ் சொன்னது. அதனையான் முற்றும் நம்புகிறேன். என்ன சொல்லுகின்றீர்கள்?” என்று கண்டித்துக் கடுங்குரலொடு கேட்டான்.அதற்கு அவர்கள் அவனை நோக்கி “ஆண்டவரே, தாங்கள் கடுஞ்சோதனை செய்தீர்களே, உங்கள் கைக்குங் கண்ணுக்கும் அணுக்களும் மறைந்திருக்க வொண்ணாவே! எங்களை என்ன சொல்லச் சொல்லுகின்றீர்கள்?” என்றார்கள். இதனைக் கேட்ட அவ்வூராளி அவர்களை நோக்கி, “பறவையோ பொய்யாதது; உங்களிடம் மாணிக்கம் கட்டாயமாய் உள்ளதென்று ஊன்றி யூன்றிச் சொல்கின்றது. அம்மாணிக்கம் உங்கள் உடைகளிற் காணப்படாவிட்டாலும், உங்கள் ஊனுக்குள் மறைந்து கிடக்கின்றதென்றே யான் உறுதியாக உளங்கொண்டிருக் கின்றேன். இப்போது பொழுது போயிற்று. நாளைக் காலையில் உடலையே சோதித்துச் சோதித்துப் பார்க்கவேண்டும்” என்ற சொல்லி அந் நால்வரையும் ஓரிருட்டறையில் தள்ளித் தாளிட்டுவிட்டான்.

அன்றிரவு மூவருடன் வந்த நடுவழியிற் சேர்ந்த நச் செண்ணத் தோனாகிய நான்காமவன் நள்ளிரவின்கண் தனக்குள்ளேயே நினைக்கின்றான். அஃதாவது "நாளைக் காலையில் இவ்வூராளி ஒவ்வொருவர் வயிற்றையும் கீறிப் பார்க்கப் போகின்றான் போலும்! முதன் முதல் அம்மூவரில் ஒருவனைச் சோதித்துப் பார்த்தானாயின் கட்டாயமாய் மாணிக்கத்தைக் காணவே போகிறான். உடனே ஏனைய