உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

271

மனைவியாயினும் குணமாலை மானமுடைய நங்கை. அவளும் வாய்பேசாது தண்ணீருடன் ஒட்டாது ஒழுகும் எண்ணெய்போல் ஒழுகி வந்தாள்.

உள்ளூர, மும்முடியின் நட்பும் அறிவுரையும் தான் கணவனை மாற்றியிருக்கவேண்டும் என்று அவள் கருதினாள். இந்த எண்ணம் அவள் வாழ்க்கையின் தனிமையை இன்னும் பெருக்கிற்று. தன்னிடம் விளக்கம் கூறாமலே, நண்பனுடன் கணவன் மேன்மேலும் நெருங்கிப் பழகுவதை அவள் கண்டாள். அந்நட்பு வளருந்தோறும், அவள் பெண்மைப்பாசம் அவள் உடலுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கிற்று.

குடும்பத்தில் நிலவிய இந்தப் பிளவு ஊரறியாத பிளவாக இருந்தது. மும்முடிகூட இதை முற்றிலும் கவனிக்கவில்லை. கவனித்த அளவிலும் குறளிமாறன் நட்பை அவள் குடும்ப நட்பாகக் கொள்ள எந்தத் தூண்டுதலும் காணவில்லை.

தன் தாயும் மனைவியும் நண்பனை ஆர்வமாக வர வேற்பார்கள் என்று குறளிமாறன் கூறியிருந்தான். ஆனால், அவர்கள் வரவேற்பில் அவன் அத்தகைய ஆர்வத்தைக் காண வில்லை. அத்துடன் கோமாறன் மனைவி குணமாலை கோமாறனைக் கூட ஆர்வமாக வரவேற்கவில்லை என்பதை அவன் குறிக்க நேர்ந்தது. இது அவனுக்குப் புதிராக இருந்தது. அவன் மீது பரிவும் அன்பும் வளர்ந்தன. இது அவன் நேச பாசத்தை இன்னும் பெருக்கிற்று.

வரவர மகனைப்பற்றிய கவலையும் பாசமும் தாய் உள்ளத்திலிருந்து விலகிற்று. அந்த இடத்தில் டத்தில் அவள் ஆண்டவன் பற்றுக்கே இடமளித்தாள். து அவள் முதுமைக்கு ஏற்ற பண்பாய் அமைந்தது. குறளிமாறன் மதிப்பை அது ன்னும் உயர்த்திற்று. ஆனால், இளநங்கையான குணமாலை நிலைமையும் அம் முதியவள் நிலைமையி லிருந்து வேறுபடவில்லை. கணவன் செல்வம் வளர்ந்தாலும், அவளுக்கு அவன் அன்புச்செல்வம் சிறிதும் கிட்டவில்லை. இது தெய்வங்களின் கோபமாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவளிடம் வளர்ந்தது.