உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




272

அப்பாத்துரையம் – 40

அது முதல் அவளுக்கு அவள் வாழ்க்கை ஒரு நீடித்த நோன்பாயிற்று. அடிக்கடி மாமியுடனேயே அவள் ஆண்டவன் பணியில் ஈடுபட்டாள். அத்துடன் துணையற்ற சிறுவர் சிறுமியர் ஏழைகள் ஆதரவிலும் தொண்டிலும், அவள் பாச உள்ளம் படர்ந்தது. அவள் இளமையின் பாசத்துடிப்பு தாய்மையின் பாச ஆர்வமாக வளர்ந்தது. ஒரு சிறிய உலகத்தாயின் உள்ளமாக அது நாளடைவில் விரிவடைந்தது.

ஒரு

கோமாறன் ஊருக்குத் திரும்பியபோது அவன் இங்ஙனம் ரு புத்தம் புதிய உலகத்தைக் கண்டு மருட்சியடைந்தான். ஊரெல்லையில் அவனைக்கண்ட சிலர் அவனைக் குறளி மாறனாகவே எண்ணிப் பேசினர். அவர்கள் அவனுக்கு அறிமுகமானவர்களே. ஆனால், அவர்கள் பேச்சு அவனுக்குப் புரியவில்லை.

66

ஒருவன் அவன் கொடாத பணத்துக்கு நன்றி கூறினான். மற்றொருவன், என்ன வீட்டுப் பக்கம் வந்து மாதம் ஒன்றாகிறதே, எங்களிடம் மனத்தாங்கலா, என்ன?" என்று

கேட்டான்.

66

ஒரு பெண், உங்கள் கடையில் இப்போது நீலச் சிற்றாடை ஒன்று வந்திருக்கிறதாமே; என் மகளுக்கு அது பிடித்திருக்கிறதாம். நாளை வருகிறேன். ஒன்று கடனாகக் கொடுங்கள் என்றாள். இந்த மாயவுரைகள் அவன் மனத்தைக் கலக்கின.

55

குடும்பத்தில் அவன் கண்ட காட்சி அவனுக்கு இன்னும் மிகுதியான அதிர்ச்சி தந்தது. தன்னைப்போலவே அங்கே ஒரு காமாறன் இருந்தான். அவன் தன் தாயிடம் அவள் மகனாகவே நடந்து கொண்டான். குணமாலையிடம் அவன் அவளுடைய கணவனாகவே நடித்தான். அவர்களும் இதை வாளா பார்த்துக்கொண்டிருந்தனர். ஊரார்கூட துபற்றி எதுவும் சொல்லவில்லை. கருதவில்லை. இவற்றைக் கண்டு அவன் தலை சுழன்றது.

மறுபுறம் பூமாரி, குணமாலை நிலைமைகளைக் கூற வேண்டியதில்லை. தம் மெய்யான மைந்தனும் கணவனுமே முன் நிற்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? 'தன் மைந்தனைப் போலவே இன்னொருவன் எப்படி வந்தான்' என்று தாய் உற்று