உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

இரண்டாம் பதிப்பின் முகவுரை

‘பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்' என்னும் இந் நூல் முதன்முதல் எமது எமது ஞானசாகர மூன்றாம் மூன்றாம் பதுமத்தில் வெளிவந்தது. அதன்பின் 1906-ஆம் ஆண்டு ஏழாந் திங்களில் அது தனிப் புத்தகமாக வெளிப்படுத்தப்பட்டது. அத் தனிப் புத்தகப் பதிப்புப் படிகள் பெரும்பாலுஞ் செலவழிந்தனவேனும், அப்பதிப்பின் பழஏடுகள் சில பலமிஞ்சியிருந்தமையின், அவற்றை நிறைவுசெய்தற் பொருட்டே இப்போது இதில் முந்நூற்று முப்பது படிகள் திரும்பப் பதிப்பிடப்பட்ட

ன.

சென்ற பல ஆண்டுகளாக யாம் இடைவிடாது செய்து வரும் ஆராய்ச்சிகளால், இந்நூலின்கட் புதியனவாய்ச் சேர்க்கவேண்டிய பொருள்களும், இதன்கண் முன்னுள்ள சொற்பொருள்களிற் செய்யவேண்டிய மாறுதல்களும் நிரம்பப் பல உளவேனும், இப்போது எம்மால் எழுதப்பட்டு வரும் நூல்கள் முடியும்வரையில், இவற்றைச் செய்து முடித்தற்கு வேறு ஒழிவுகாலம் இல்லாமைபற்றி, இந்நூலின் இவ் விரண்டாம் பதிப்பு முற்றும் முன்னுள்ள படியாகவே பதிப்பிக்கப்படலாயிற்று. இந்நூலின்கண் தமிழர் ஆரியரைப் பற்றி யாம் பதினெட்டு ஆண்டுகட்கு முன்னரே வரைந்துள்ள கருத்துக்கள் மேன்மேல் மேன்மேல் ஆராய்ச்சிகளால் மேன்மேல் உரம்பெற்று வருகின்றனவே யல்லாமல், அவை சிறிதும் மாறுபடவில்லை. அவ்விரிவு களெல்லாம் இதன் மூன்றாம் பதிப்பின்கண் எடுத்துக்காட்ட நினைந்திருக்கின்றேம். இந்நூல் நடையின்கண் ஆங்காங்கு விரவியுள்ள சிற்சில வடசொற்களும் அம் மூன்றாம் பதிப்பின்கண் முற்றுங் களைந்து விடப்படும்.

பல்லாவரம்

பொதுநிலைக்கழகம்,

12-10-1924

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/30&oldid=1591693" இலிருந்து மீள்விக்கப்பட்டது