உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பரவி

மறைமலையம் -29

நூல்கள் இயற்றுதல் மிக அரிதாம். அது காலங்கடோறும் வேறுபட்டு வருமாயின் அதனை வழங்கும் மக்கள் தங்கருத்தறிவிக்க எளிதான கருவி காணமாட்டாது மிக இடர்ப்படுவர். இதுபற்றியே ஆங்கில அரசுடையார் தம்முடைய மொழியினை ஒழுங்க கடவாது நிலைபெறுவித்தற் பொருட்டுக் கல்விச்சாலைகள் பலப்பல வியற்றி மொழியினைத் திருத்தமுறக் கற்பித்துக் கல்விவளம் பெருக்கி வருகின்றார். நாகரிக மக்களிடத்து நடைபெறும் மொழிகள் விரைவிலே வேறுபடுதலில்லை; புதிய சில சொற்கள் பிறரிடமிருந்து போந்து சேரும் அம்மட்டேயன்றித் தம் உருவவியல் பெரிதுந் திரிபெய்தாது வழங்கும். ஒரு மொழி உருவந் திரிபடையாது நிலைநிற்றற்கு வேண்டும் முயற்சி என்னை என்று ஆயும்வழி அதன்கண் ஒவ்வொரு சொல்லும் பண்டு தொட்டு வாங்குமாறும், அச் சொற்கள் தோன்றுங்காற் பெற்ற ற் காரணமும், அவை வாக்கியங்களில் தொடர்புற்று நின்று பொருள் அறிவிக்குமாறும், அவற்றோடு கலந்து வழங்கும் பிறமொழிச் சொற்கள் இவை என்றலும் இனிது அறியப்பட்டு வருதலேயாம். இவை இவ்வாறு அறியப்படுதல் கற்றோரிடத் தன்றி மற்றை யோரிடத்து இல்லையாலோவெனின்; ஓர் ஊரில் கற்றறிவுடையார் ஒருவர் இருப்பினும் அவரால் அவ்வூரார் எல்லாரும் திருத்தமடைவார். "தாழி நிறையப் பெய்த தீம்பாலில் குற்றிய உறைத்துளி மிகச் சிறிதாயினும், அஃது அப் பால் முழுவதையும் தீஞ்சுவைத் தயிராகத் திரிபு செய்தல்போலக் கற்றார் ஒருவரேயாயினும் அவர் தம்மைச் சூழ்ந்தார் அனைவரும் நலம் பறச் செய்வர். எங்ஙனமெனின், அவர் தம்பால் வந்தணுகுவோர்க்குத் திருந்திய சொற்பொருளை அறிவிப்ப, அறிவிக்கப்பட்ட அவர் மாணவர் தாம் அவற்றைப் பிறர்க்கு அறிவிப்ப, அப் பிறர் அவற்றை வேறு பிறர்க்கு அறிவிப்ப, இங்ஙனம் ஓரிடத்துத் தோன்றிய அலை தடாகத்தின் நாற்புறங்களினும் பல அலைகளைத் தோற்றுவித்து நடைபெறச் செய்தல்போல அக் கற்றறிவுடையார் தாம் பெற்ற அவரறிந்தும் அறியாமலும் யாண்டும் பரவிக்கொண்டேயிருக்கும். இவ்வாறு உலகத்தில் நடைபெறும் ஒழுக்கங்களெல்லாம் கற்றாராற் சீர்திருந்தப் பெற்று வருதல் பற்றியே “உலகமென்ப துயர்ந்தோர் மாட்டே” என்னும் திருவாக்கு எழுந்தது.

அத்திருத்தங்களெல்லாம்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/43&oldid=1591706" இலிருந்து மீள்விக்கப்பட்டது