உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் - 29

னி, ஆரியர் வருதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிக முடையரா யிருந்தனரென்பது இருக்குவே தத்தினாலேயே இனிது அறியப்பட்டதொன்றாம். ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து குடியேறிய காலத்தில், உள்நாட்டில் இருந்த தமிழர் எழுவகை அரண்மனைகளும், தொண்ணூறு கோட்டைகளும் உடையராய் வாழ்ந்தனரென இருக்குவேதம்' உரை தருகின்றது. இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டிடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ் செல்வவளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பலதிறப்பட்ட இலௌகிக கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றெனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை உடையராயிருந்த தமிழர் தமது நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்றுவந்தா ரென்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே, ஓரிடத்தும் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கை யுடையராய் இந்தியாவினுட் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடாத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ்மக்களால் நெறிப்படுத்தப் பட்ட இலக்கணமுறை கண்டு தாமும் உயிர்மெய் எழுத்துக்களை முறைப்படுத்தினாரென்று துணிக.

ஆரியர் வருஞான்று, தமிழர் அரசியல் முறை பிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் ‘அசுரர்' என்று பெயரிட்டு வழங்கினார். இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் அசுர’ என்னுஞ் சொல் 'வலிய’ அல்லது அதிகாரமுடைய' என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வரகின்றதென்றும், ‘அசுரர்’ என்பதற்கு அதனால் ‘தலைவர்” என்னும் பொருள் பெறப்படுகின்ற தென்றும் உரோமேஷ் சந்திரதத்தரும் இனிது விளக்கினார். ‘DIறு’ என்பது ‘மிஞிறு’ எனவும், ‘தசை’ என்பது ‘சதை எனவும், ‘விசிறி' என்பது ‘சிவிறி' எனவும் எழுத்து நிலைமாறி வருதல்போல ‘அரசு’ என்னுந் தமிழ்ச்சொல் ‘அசர’ என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/51&oldid=1591714" இலிருந்து மீள்விக்கப்பட்டது