உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 29

-

இன்னும் அம்முகத்திற் கண்களிலேயே அக நிகழ்ச்சி முழுது

முணரப்படுமென்று விளக்கி,

“நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்.”

என்று

கட்டளை யிட்டருளினார்.

தெய்வப்புலமைத்

திருவள்ளுவரும் இதனைச் சிறப்பித்துக் கூறுமாறு காண்க. உரிமை நண்பர்காள்! உலக இயற்கை உயிர் இயற்கை களெல்லாம் இங்ஙனம் வரைசெய்த இலக்கணமெழுதிய ஆசிரியர் தொல்காப்பியனாரை ஒத்த ஆசிரியரையாயினும், அல்லாதவர் அருளிச் செய்த தொல்காப்பியம் போன்ற பிறிதொரு நூலையாயினும் இற்றைக்கு நாலாயிர ஆண்டுகளின் முன் நாகரிகமெய்திய எத்தேசத்திலாயினும் எம்மொழியி லாயினுங் காட்டுதல் கூடுமா? நடுநிலைதிறம்பா துரைமின்கள்!

இனி, இவ்வுலகத்தின் உள்ளும் புறம்புமாய் நின்று அறியவல்லதை அறிவித்தும், அசைய வல்லதை அசைவித்தும் பேரொளிப் பிழம்பாய் அருவாய் அறிவாய் இன்பமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் நிலையைச் சுட்டி ஆசிரியர் தொல்காப்பியனார் இற்றைக்கு நாலாயிர ஆண்டுகளின் முன்னே நிறுவிய பொருட்டிட்பத்தை அதேகாலத்திற் றோன்றிய ஆரிய சாதியார் நூல்களிற் சொல்லிய தெய்வ நிலையோடு ஒப்பிட்டுக் காண்போமாயின் தமிழரது பண்டைக்கால நாகரிக வளம் மேலும் மிக்குவிளங்கும்.

ஆசிரியர் "கொடி நிலை கந்தழி வள்ளி” என்ற சூத்திரத்தில் ‘கந்தழி’ என்னும் முழுமுதற் பரம்பொருள் ‘ஒரு பற்றுமற்று அருவாய்த தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்' என்று வலியுறுத்தார். இஃததற்குரை கண்ட நச்சினார்க்கினியர் கூறுமாற்றான் நன்கு பெறப்படும். இதனாற் கந்தழி எனப்படுங் கடவுள் சித்து, சடம் என்னும் இருவகை யுலகினுள்ளும் ஒன்றன்றாய் இவை தம்மையெல்லாம் முற்றும் சூழ்ந்து கொண்டு எவ்வகைப்பற்றுமின்றி நிலைபெறும் பேரின்ப நிலையமென்பது பெற்றாம். அத்துணைப் பழைய காலத்தே கடவுட்டன்மையினை இவ்வாறுணர்ந் துரைத்தவர் உலகில் வேறு யாண்டுங் காணப்படார். மிகவும் பழைய நூலான இருக்குவேதத்தை ஆராய்ந்து பார்மின்! இருக்குவேத காலத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/61&oldid=1591724" இலிருந்து மீள்விக்கப்பட்டது