உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பின் இணைப்பு

1. உயிர்களின் தோற்றம்

இந் நிலஉலகத்தில் உயிர் உள் பொருள்களும் உயிர்இ பொருள்களும் ஆகிய இருவகையும் ஒருங்கு காணப்படுகின்றன. இவற்றுள், உயிர்உள் பொருள்களுக்குப் பயன்படுமுகத்தால் உயிர்இல் பொருள்கள் ஆராய்ந்தறியப்படுகின்றனவேயன்றி, இவை முன்னையவற்றின் தொடர்பின்றி அங்ஙனம் அறியப் படுதலைக் காண்கிலேம். ஆகவே, உயிர்ப் பொருள்களைப் பற்றித் தெளிவான அறிவு பெற்றால், அவ்வறிவு பெறுவார்க் கெல்லாம் அஃது அறிவும் இன்பமும் அளித்து, அவரது மண்ணுலக வாழ்க்கையை விண் ணுலக வாழ். க்கை யோடொப்பச் செய்யுந் திறத்ததாம் என்பதனை அனைவரும் நினைவிற் பதித்தல் வேண்டும்.

இனி, இங்ஙனம் இன்றியமையாது ஆராய்ந்து அறியற் பாலனவாகிய உயிர்களோ எண்ணிறந்த கோடியன; என்றாலும், அவைதம்மிற் புலனாகும் உணர்வின் அறிவின் பெருமை சிறுமை கண்டு, அவைதம்மை ஆறு தொகுதிகளாகப் பகுத்துப், பண்டைத் தமிழாசிரியராகிய தொல்காப்பியனார் அளவு படுத்தி யிருக்கின்றார். தொட்டாலுணரும் உணர்ச்சிமட்டும் உடைய ஓர் அறிவுயிர்களும், தொடுதலுடன் நாவினாற் சுவைத்துணரும் ஈர் அறிவுயிர்களும், தொடுதல் சுவைத்தலுடன் மோந்துணரும் மூக்குணர்வும் வாய்ந்த மூவறிவுயிர்களும், இம் மூன்றனுடன் கண்ணாற் கண்டுணருங் கண்ணுணர்வும் வாய்ந்த நாலறிவுயிர்களும், இந்நான்கனுடன் செவியாற் கேட்டுணருஞ் செவியுணர்வும் வாய்ந்த ஐயறிவுயிர்களும், இனி இவ்வவைம் னி புலன்களால் அறிந்தவற்றை, நல்லதிது தீயதிது, இஃது இதனையொப்பது, இஃது இதனின் வேறாவது எனப்பகுத்துக்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/73&oldid=1591737" இலிருந்து மீள்விக்கப்பட்டது