உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

உலகினர் ஒழுங்கிற்கும், ஒற்றுமைக்கும், ஒருங் கிணைந்த உணர்வுகளுக்கும் உருவாக்கங்களுக்கும் உதவுகிற வகையில் அமைந்தது இந்நூல். பழைய வேதங்களில், உபநிடதங்களில், திகாசங்களில், சாதிகள் இல்லாதிருப்பதையும் மிருதிகளில் ஒழுக்கம் பற்றியதாகச் சாதிப்பிரிவுகள் இருத்தலையும் தொழில் பற்றியதாகத் தொல்காப்பியத்தில் சாதிப் பிரிவுகள் இருத்தலையும், வைணவ நூல்களில் சாதி வேற்றுமைகள் இல்லாதிருத்தலையும், சாதி வேற்றுமை களை ஒழிக்கும் வழிகளையும் அடிகளார் விளக்கி யுள்ளார்.

சைவ

பழமையானதெனக் கொண்டு சாதி வேற்றுமை களைத் தழுவியொழுகுதல் பகுத்தறிவில் விளைந்த பற்றாக்குறையாகும் பழமை புதுமைகளில் விளங்கும் நன்மை துமைகளைக் கருத்தில் கொண்டு காண்டு கடைப் பிடிக்க வேண்டும்.

சாதி

வேற்றுமைகளுக்குக் காரணங்களான ணவுமுறைகள் கல்வியறிவு, கடவுள் வழிபாட்டு முறைகள், தூய்மை நிலைகள், ஒழுங்கு நிலைகள் ஆகிய அடிப்படைகளின் வழியே சாதி வேற்றுமை களைக் களைய அறிவுறுத்தியுள்ளார் அடிகளார்.

சாதி வேற்றுமை என்னும் கொடிய என்புருக்கி நோய் தென்னாட்டவர் திறனைத் தின்று தீர்த்து விடுமென இந்நூலில் இடித்துரைக்கிறார் அடிகளார்

டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/83&oldid=1591747" இலிருந்து மீள்விக்கப்பட்டது