உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் - 29

தாமே ஒப்புக்கொண்ட மட்டில் அவர்கள் பார்ப்பனர் வீட்டுக் கடைவாயிலிற் காத்திருந்து அடிமைவேலை ல செய்யும் ஊழியக்காரரே யாவரல்லாமல், உயர்ந்த சாதியாராதல்

யாங்ஙனம்?

அற்றன், ‘யாங்கள் கொலைபுலைதவிர்ந்து சிவவழிபாடு இயற்றி உழவும் வாணிகமும் நடாத்திச் செல்வாழ்க்கை யுடையேமாய் இருத்தலின் எம்மை மற்றைச் சூத்திர வகுப்பார் எல்லாரோடும் சேர்த்தல் ஆகாது, யாம் சூத்திரரிற் சிறந்த சற்சூத்திரரே ஆவேம்'எனின்; மேலெடுத்துக்காட்டிய மனு முதலான பழைய மிருதி நூல்களிற் சூத்திரரில் ஒருவகையே சொல்லப்பட்டிருக்கின்ற தல்லாமற், சற்சூத்திரர் என்னும் மற்றொருவகை அவற்றுள் யாண்டும் சொல்லப்படவில்லை; சூத்திரர் என்போர் பார்ப்பனர் அரசர் வணிகர் என்னும் ஏனை மூன்று வகுப்பினர்க்கும் அடிமைகளாய் ஊழியம் ஒன்றே செய்தற்குரிய ரல்லாமல், உழவு வாணிகம் நடாத்திச் செல்வந் தாகுக்கவாவது, கல்வி கற்கவாவது, சிவவழிபாடு இயற்றவாவது உரிமை வாய்ந்தவர்கள் அல்லர். ஆதலாற் ‘சற்சூத்திரர்’ என்னுஞ் சொல்வழக்குப் பழைய வடமொழி மிருதி நூல்களுக்கு முற்றும் மாறாவதொன்றா மென்று

உணர்ந்துகொள்க.

.

அற்றேற், ‘சற்சூத்திரர்' என்னும் பெயரும் அவர்க்குரிய கடமைகளும் சிவாகமங்களிற் சொல்லப்பட்டிருக் கின்றனவே யெனின்; 'சிவாகமங்கள்' என்னும்பெயரால் இப்போது நடைபெறும் சில வடமொழி நூல்கள், கோயிலில் வழிபாடு ஆற்றும் முறைகளையுங் கோயில் அமைக்கும் வகைகளையுந் தெரித்தற்பொருட்டு இருநூறு முந்நூறு ஆண்டுகளாகக் கோயிற் குருக்கண்மார்களால் எழுதிவைக்கப்பட்டன வாகும். கோயில்வழிபாடுகளும் கோயிற்குருக்கண்மார் பிழைப்பும் செல்வர்களாயுள்ள சைவவேளாளர்களின் பொருளுதவியைக் கொண்டே நடைபெற வேண்டியிருத்தலின், அவர்களைச் சூத்திரவகுப்பா ரெல்லாரோடும் பொதுவாகச் சேர்த்துக் கூறுதற்கு, அஞ்சியே, அந்நூல்களை எழுதிய குருக்கண்மார்கள் அவர்களைச் சிறிது உயர்த்திவைத்தற்காகச் சற்சூத்திரர்' என்னுஞ் சொல்லைப் புதிதாகப்படைத்து அவற்றுள் நுழைப்பாராயினர். சிவபிரான் றிருக்கோயிற்

அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/119&oldid=1591784" இலிருந்து மீள்விக்கப்பட்டது