உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 29 -

தமது நிறம் மாறிக் கருநிறமுடையராதலை நங் கண்ணெதிரே இன்றுங் காணலாம்; மற்று, இந்தியநாட்டுக்குப் புறம்பேயுள்ள வடநாடுகள் நடுக்கோட்டுக்குப் பெரிதும் விலகியிருத்தலால், அவை வெயில்வெப்ப மின்றிக் குளிர்மிகுந்தனவாயிருக் கின்றன; அதனால், அந்நாடுகளில் உறைவோர் எவ்வளவு உழைப்பான தொழில்களைப் பகல் வெளிச்சத்தினின்று எத்தனை நாட்கள் செய்வாராயினுந் தமதுநிறம் சிறிதும் மாறுதலின்றி வண்மையாகவே இருப்பர். தமிழரில் உழைப்பாளிகள் கரியநிறத்தினரா யிருப்பினும் அவர்களிற் பெரும்பாலார் திருத்தமான உறுப்புகள் வாய்ந்து அழகியராகவே இருக்கின்றனர். வெள்ளைக்காரரிற் பலர் வண்ணிறத்தினராயிருப்பினும், திருத்தமான உறுப்புகள் வாயாமையின் அழகு இலராயும் இருக்கின்றனர். ஆகையாற், கரியநிறம் பற்றித் தமிழரிற் அழகிலரென இகழ்ந்துரைத்தல் அமையாது. யாங்கூறிய வ்வுண்மை நுண்ணிய ஆராய்ச்சிவல்ல கால்ட்வெல் ஆசிரியராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது. அதுநிற்க.

கைத்தொழில்புரிவாரை

இந்திய நாட்டுட் புகுந்து தமிழரொடு நெடுங்காலம் போராடியும் அவரை முறியடித்தல் இயலாமை கண்ட ஆரியர் பிறகு அவருடன் நட்புக்கொண்டு அவ்வழியால் வடநாட்டிற் பல இடங்களினுங் குடியேறி வைகுவாராயினர். இந்திய நாட்டுக்கு வரும்முன் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு, அவற்றின் மேய்ச்சலுக்குப் புல்வளர்ந்த நிலங்களைத் தேடித்திரிந்தபடியாகவே இருந்தனர். இவ்விந்தியநாட்டுக்குப் புறம்பேயுள்ள வடபால் நிலங்கள் பெரும்பாலும் பனிக்கட்டி களால் மூடப்பட்டிருத்தலானும், ஆறு திங்களில் இரண்டரைத் திங்கள் வரையிற் பகலவன் வெளிச்சம் இன்றி எங்கும் இருளாயும் மற்றை மூன்றரைத் திங்கள் சிறுவெளிச்சமாயும் அவையிருத்த லானும் அங்கே உழவுதொழில் நடைபெறுதல் இயலாது. ஆதலால், அவ்வடபால் நிலங்களிலிருந்த ஆரியர் ஆடு மாடுகள் வளர்த்து அவற்றாற் பெறப்படும் பால்தயிர் நெய்யையும் அவற்றின் இறைச்சியையும் அயின்றே பெரும் பாலும் உயிர்வாழ்ந்து வந்தனர். பண்டை நாளில் வடபகால் இருந்த ஆரியரின் உயிர்வாழ்க்கை இத்தன்மைத்தாதல் அவர்கள் அஞ்ஞான்றுபாடிய மிகப் பழைய இருக்கு வேதப்பதிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/125&oldid=1591790" இலிருந்து மீள்விக்கப்பட்டது