உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

சிறிது

131

சிவபிரான் திருககோயிலிலே தண்ணீரால் விளக்கு எரித்தவரும் ஆன நமிநந்தியடிகள், ஒருகால் பங்குனித் திருவிழாவில் எழுந்தருளிய ஆண்டவன் திருவுருவினைப் பெருங்கூட்டத்திற் சென்று கண்டு வணங்கிப், பின்னர்த் தம்மனைக்கு ஏகினார். ஏகினவர், தாம் பார்ப்பன குலத்திற் பிறந்தமையால் ஏனை இழிகுலத்தார் கலந்த கூட்டத்திற் சென்று வணங்கினது, தமக்குத் தீட்டு உண்டாக்கிற்றென்று நினைந்து, தமது மனையின் உள்ளே புகாமற், புறத்தே திண்ணையில் ஒதுங்கியிருந்து, தாம் தலைமுழுகி உள்நுழைந்து பூசை யாற்றுதற்காகத் தண்ணீர் கொணரும்படி தம் மனைவியார்க்குக் கற்பித்தார். மனைவியார் அவரது தலைமுழுக்குக்கு வேண்டுவன ஒழுங்குபடுத்தச்செல்ல, அவர் கண்உறங்கினார். அப்போது அவரது கனவிற்றோன்றிய சிவபிரான், “திருவாரூரில் உள்ளவர்க ளெல்லாரும் நம் அடியார் கூட்டத்திற் சேர்ந்தவ ரென்பது அறிந்திலையோ! அவரை இழிகுலத்தாராக நீ கருதியது என்னை!” எனக்கூறி மறைந்தருளினர். அதுகண்டு உடனே விழித்தெழுந்த நமிநந்தியடிகள் தாம் செய்த பிழையினை நினைந்து வருந்தித், தலை முழுகாமலே தமது இல்லத்தினுட் புகுந்து சிவபிரானுக்குப் பூசையாற்றி உணவு கொண்டு துயின்றார். மறுநாள் அவர் திருவாரூரில் இறைவனை வணங்கச் சென்றுழி, அவ்வூரில் உள்ளார் அனைவரும் முதலிற் சிவபிரான் வடிவினை ராய்த் திகழ்ந்து பின்னர்த் தத்தம் பழைய வடிவத்தோடுந் தோன்றக் கண்டு, அவர் அன்றுமுதற் சாதிவேற்றுமையினை ஒழித்து இனிது வாழ்ந்தார். இவ்வாறே நிகழ்ந்த வரலாறுகள் அளவிறந்தன. அவற்றைப் பெரியபுராணம் முதலான

உண்மைநூல்களுட்கண்டு தெளிக.

o

னி, வைணவ சமயத்துள்ளும், சாதிவேற்றுமையானது திருமாலின் திருவடிகளை அடையவொட்டாமற் றடுக்கும் பெருந்தடையா தலைக் காட்டும் வரலாறுகள் பல இருக்கின்றன. அவற்றுட் சில மட்டும் இங்கே எடுத்துக் காட்டுதும், திருமாலுக்குத் தொண்டுசெய்து அவரைப்பாடிய ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரான திருப்பாணாழ்வார் என்பவர், பறையரில் இசைபாடும் வகுப்பிற்சேர்ந்த பாணர் குடியிற் பிறந்தவர் ஆவர். இவர் திருமால் திருவடிக்கண் அன்புமீதூரப் பெற்றமையால், நாடோறுங் கையில் யாழ்ஏந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/156&oldid=1591823" இலிருந்து மீள்விக்கப்பட்டது