உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் - 29

உயர்ந்தவராயிருந்தால்

அச்

அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இடுகின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் தம்போற் பிறப்பினாலுயர்ந்த பிராமணருடனிருந்து உண்கின்றது தானே? பிறப்பினாலேதான் சாதியென்று சொல்லும் போலிச் சைவர் தம்மைச் சூத்திரர் என்று தாமே ஒப்புக்கொள்வ தனால் அவர் சூத்திரவகுப்பினின்று தப்ப வகையில்லை; அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனுமுதலிய மிருதி நூல்களின்படி பிராமணர் கடைவாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியைத் தாம் தலையாற்செய்து அவர் இடும் எச்சிற்சோற்றை உண்டு ஊழியக்காரராய்க் காலங்கழிக்க வேண்டுமேயல்லாமற், பட்டைபட்டையாய்த் திருநீறு பூசிக்கொண்டு,பகட்டான காசித் துப்பட்டா பொன்கட்டின உருத்திராக்கமாலை எல்லாம் அணிந்துகொண்டு, தம்மினும் பிறப்பினால் உயர்ந்த பிராமணருக் கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும், நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்ல முன்வந்த போலிச்சைவர் தம் புன்மொழியால் அருளொழுக் கத்தினும் சிவத்தொண்டினும் அடியார்பால் அன்பினுஞ் சிறந்து விளங்கும் உண்மைச் சைவவேளாளரையும் பிறரையும் இழிந்த சூத்திரராக்கி விட்டாரே! அந்தோ! உண்மைச் சைவர்களாகிய அன்பர்களே, பிறப்பினாலேதான் சாதியென்று உரைக்கும் போலிச்சைவர் புன்மொழிகளைக் கேட்டு மயங்கிவிடாதீர்கள்! பிறப்பினாலே தான் சாதி யென்னும் அவர் சொற்களைக் கேட்டு நம்பிவிடுவீர் களானால், நீங்கள் எல்லீரும் இழிந்த சூத்திரராகக் கொள்ளப் படுவீர்கள்; ஊன் உண்கின்றவர்களுககும் ஊன் உண்ணாமல் அருளொழுக்கத்தில் நிற்கின்ற உங்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும். யாம் வட மொழி வேதம் தமிழ்மறை முதலியவற்றையும் உலக வழக்கையும் மேற்கோளாகக் கொண்டு அருள் ஒழுக்கத்தினாலேதான் சாதி உயர்வுண்டு என்று சொல்லுவனவற்றை நம்புவீர் களானால், நீங்கள் மிக உயர்ந்த சாதியாராக அறிவுடையோர் எல்லாராலும் நன்கு பாராட்டப் படுதல் திண்ணம். அறிவுடையார் பாராட்டு தலையே சீராட்டாகக் கொண்மின்கள்; அறிவில்லார் பாராட்டை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்; அறிவில்லார் ஆயிரவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/165&oldid=1591832" இலிருந்து மீள்விக்கப்பட்டது