உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

எழுதிவருகின்றார்.

147

ை யர் தம்மைக்

நூல்களினும் 'கோவைசியர்' எனவும், கோமுட்டிகள் வாணிகர் முதலாயினார் தம்மைத் 'தனவைசியர்' எனவுஞ் சொல்லி வருகின்றனர். வேளாளரில் ஒருவரும் தமது சாதியாரை 'வைசியர்’ என எழுதியிருக்கின்றார். நாட்டுக்கோட்டைச் செட்டிமாரும் தம்மைத் தனவைசியரென்று எழுதி வருகின்றார். பறையர் வகுப்பிற் கல்வியிற் றேர்ந்தவர்கள் தம்மைப் பார்ப்பனரினும் மேலானவர் என்று சொல்வதோடு, “பார்பானுக்கு மூத்தான் பறையன் கேட்பாரில்லாமற் கீழ்ச்சாதியானான். என மேற்கோள்களுங் காட்டுகின்றார்கள்; இப் பறையரிற் கல்வியினுஞ் செல்வத்தினும் உயர்ந்த செல்வர்களின் கடைவாயிலிற் காத்திருந்து அவர் இடுவன வற்றைப் பெற்று மகிழ்ந்து வரும் வேளாளப் புலவர்கள் எத்தனைபெயர்! போலிச்சைவர் எத்தனை பெயர்! அவர்கள்மேற் பாட்டுகள் பாடினவர்களும், பாடுகிறவர்களும் எத்தனை பெயர்! இவ்வாறெல்லாம் அவர்கள் வீசி எறிவன வற்றைக் குனிந்து பொறுக்கியுண்டு நன்றி மறந்து அச்செல்வர்களைப் பறையரென இகழ்ந்துரைப்பது எவ்வளவு பேதைமை! சைவசமயத்திற் சார்ந்த பறையரையுஞ்

சான்றாரையுங் கோயிற்கோபுரவாயில்களினும் நெருங்க விடாத போலிச்சைவர் முதலாயினார், புறச் சமயத்தினராய் எல்லா வகையான ஊனும் உண்ணும் கிறித்துவ மகமதிய அதிகாரிகள் வந்தால் அவர்கள்முன் பல்லை இளித்துக்காட்டி அவர்களைக் கோயிலினுள்ளே அழைத்துச்செல்வது என்னை! இங்ஙனமே இன்னும் போலிச்சைவர் முதலாயினார் மற்றையோரிடத்துக் கள்ளமாய் நடக்கும் படிற்றொழுக்கத்தை விரிக்கப்புகுந்தால் இது மிகவிரியும். எனவே, உலகவழக்கில் நிகழும்

உண்மை

நிகழ்ச்சிகளை உற்று ஆராய்ந்துபார்த்தால், மறைவாகவும் வெளிப்படையாகவும் ஒரு வகுப்பாருடன் மற்றொரு வகுப்பார் கலந்துவிடுதல் இயல்பாகப் பண்டு தொட்டு நிகழ்ந்து வருதலை நன்கு அறியலாம். ஒரு வகுப்பினரின் இரத்தத்தில் மற்றொரு வகுப்பினரின் இரத்தங் கலந்துவிடுதல் இஞ்ஞான்று எங்கும் நிகழ்தல்போலவே, பண்டைநாளிலிருந்த நம்முன்னோரிலும் ருவகுப்பினரின் இரத்தத்தில் மற்றொரு வகுப்பினரின் இரத்தங் கலந்து வந்தமை பழைய நூல்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. சதபதபிராமணத்தில் (3,2, 1, 40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/172&oldid=1591840" இலிருந்து மீள்விக்கப்பட்டது