உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் -29 -

“இந்தப் பார்ப்பனர் இப்போதுதான் தூயனாக்கப்பட்டான்; இதற்குமுன் இவன் இன்னபிறப்பினனென்பது திண்ணமாய்த் தெரியாது. ஏனென்றால் ‘அரக்கர்கள் மாதர்களைப்

பின்றொடர்ந்து செல்கின்றார்கள்; ஆதலால், அரக்கர்களே மாதர்களின் உள்ளே வித்தை நுழைக்கின்றார்கள்' என்பது நுவலப்பட்டிருக்கின்றது. இன்னும், அந்நூலில் (2, 5, 2, 20), வேள்வி வேட்கும் வேள்வியாசிரியன் மனைவிக்குக் காமக் கணவர் பலர் உளரென்றும், அதனால் அவன் ‘வருணப் பிரகாசம்' என்னம் அவியைக் கொடுக்கும் நேரத்தில் தன் மனையாளை வேள்விக் களத்திற்குக்கொணர்ந்து 'இப்போது எந்தக்கணவனோடு கூடியிருக்கின்றனை?' எனக்கேட்டு, அவனது வாய்ப்பிறப்பை யறிந்து உண்மை தெரிந்த பின், அவளுடனிருந்து அவ் அவியைக் கொடுக்கும்வகை நன்கெடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. இங்ஙனமே மகாபாரதம், ஆதி பருவத்தில் (122, 4719) “மாதர்கள் தம் கணவரைவிட்டுப்போய்த் தம்மால் விரும்பப்பட்டோருடன்

கூடியிருத்தல் குற்றமாகக் கருதப்படவில்லை" என்பது கூறப்பட்டிருக்கின்றது. இன்னும் அதன் வனபர்வத்தில் (12480), ஒரு மலைப்பாம்பிற்குந் தருமபுத்திரனுக்கும் இடை நிகழ்ந்த உரையாட்டில், அம் மலைப்பாம்பு “ஒருவனது செய்கையைக் காண்டே அவனைப் பார்ப்பனன் என்று உறுதிப்படுத்தல் வேண்டுமென்றால், செய்கையானது தெரியும்வரையிற் பிறப்புப் பயனற்றதாகின்றது” என்று தருமபுத்திரனை நோக்கிக் கூற, அவன், “எல்லாச் சாதிகளும் ஒன்றோடொன்று கலப்புற்று நிற்கும் இப்போதுள்ள நிலைமையிற், பிறப்பு இன்னதென்று பிரித்துக்காண்டல் இயலாததேயாகும்; எல்லாவகையான ஆண்மக்களும் எல்லாவகையான பெண்மக்களோடுங் கூடித் தொடர்பாகப் பிள்ளைகளைப் பெறுகின்றார்கள். பேச்சும், பிள்ளைப் பெறும் வகையும், பிறப்பும், இறப்பும் எல்லா மக்களுள்ளும் ஒரு தன்மையவாகவே காணப்படுகின்றன. ஆதலால், உண்மையை உற்றுணரும் நுண்ணறிவினோர் உயர்ந்த ஒழுக்கமே முதன்மையாக வேண்டற்பாலதென அறிகின்றார்கள்.” எனவிடை புகலுமாற்றால், தருமபுத்திரன் இருந்த இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரேயே ஒரு

வகையும்,பிறப்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/173&oldid=1591841" இலிருந்து மீள்விக்கப்பட்டது