உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

66

தொன்மைத் தமிழர் நாகரிகம், தமிழ்நாட்டு வளம், தமிழ் நூற்சிறப்பு, தமிழ் நூல்களின் ஆராய்ச்சி, கால வரையறை ஆரியர் வருகை, அவர்கள் நிலைமை அவர்களுக்குத் தமிழ் நன்மக்கள் ஆற்றிய கைம்மாறு கருதா உதவி.. எல்லாவற்றையும் செவ்வனே விளக்கத் திகழும் ஒரு சிறந்த வரலாற்ற நூலாக இந்நூல் திகழுகிறது. உறுதித் பா ாருள்கள் நான்கில் இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் அரிதுணர் பாருளெனவாய்க் கிடந்த அறம்பொருள்களை, அவை தம்மை ஆரா வேட்கையோடு ஏற்றுப் பயன் படுத்தத் தக்கார்க்கும் மட்டும் மறைவாய் அறிவுறுத்து வனவே மறைகள் ஆகும்” மறை, "மூடு பொருள் டு உடையது அல்லது மறைபொருள் உடையது” என்னும் அடிகளார் விளக்கம் பொருள் மிக்கதாகும்.

தமிழ்ப் பகைவரிடத்தே விழிப்புறுதலே தமிழர் தம் முதற் பெருங் கடமையென அறிவுறுத்தி, என்றும் விளங்கும் எழிற்றமிழ் மறந்து, வாழ்விழந்த வட மொழியைப் பிழைபட விழைவார் பேதைமை கடிகிறார் அடிகளார். தமிழின் வளஞ்சேர்க்கவும் வாழ்வு காக்கவும் தமிழ் இளைஞர்கள், தமிழாசிரியர் கள் ஆகியோர், கோயில்களில் ஆரிய மொழியை அறவே யொழித்து இறைவழிபாட்டிற்கும் இன்றமிழை யே ஏற்றிப் போற்றவேண்டும். இவ்வாறு ஆய்வாளர் முதல் அனைவர்க்கும் அறிவுச் செல்வத்தை அள்ளி வழங்கும் செய்திக் கருவூலமாக இந்நூல் விளங்குகிறது.

– டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/199&oldid=1591868" இலிருந்து மீள்விக்கப்பட்டது