உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

  • மறைமலையம் -29

Hospital) அலுவல் பார்க்குந் திருவாளர் குமாரசாமி அவர்களை ஊக்கி, அவர்களும் அவர்களின் நண்பர் சிலருமாக ஒருங்கு சேர்ந்து அந்நூற் பதிப்புச் செலவுக்கு இருநூறு ரூபா பொருளுதவி செய்யுமாறும் புரிந்திட்டார்கள். தமிழில்

த்தகைய புதுமுறை ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதற்கு உதவி செய்தலினுஞ் சிறந்த அறம் வேறு இல்லை. இவ்வுயர்ந்த அறத்தைச் செய்துவருந் திருக்கந்தையா அவர்கட்கும் அவர்களின் நண்பர் திருக் குமாரசாமி அவர்கட்கும் அவர்களோடு ஒத்து உதவி செய்த மற்ற நண்பர்கட்கும் யாம் பெரிதும் நன்றி செலுத்துகின்றேம்.

கல்விவளர்ச்சியின் பொருட்டுப் பல நன்முயற்சிகளை யாம் இடைவிடாது செய்துவருதலால், 'தமிழர் நாகரிகம்’ என்னும் இதனை எழுதி வெளியிடுதற்கு அமயம் வாயாது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. பிறகு, நாட்டுக்கோட்டைச் செட்டிமார் முன்னேற்றத்தின் பொருட்டு வெளியிடப்படுந் 'தனவைசிய ஊழியன்' என்னும் இதழில் (கி.பி. 1923 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 12 ஆம் நாள்) அதன் தலைவர் வேளாளர் உண்மை வரலாறுகளை அறியாமல் அவரைச் 'சூத்திரர்' என்று இகழ்நது, தம் மரபினரில் உள்ள ஆடவர்கட்கு வேளாள மரபினரிலிருந்து பெண்கள் எடுத்து மணஞ் செய்வித்துக் கொள்ளுதலைப்பற்றிப் பேசியவிடத்துத், தாம் வைசிய வகுப்பினராகலான் தம்மவர் தம்மிற்றாழ்ந்த சூத்திர வகுப்பினரான வேளாளரிடமிருந்து பெண்கள் எடுத்து மணஞ் செய்து கொள்ளல் முறையேயாம் என்று எழுதிய கட்டுரை ஒன்றைக் கண்டேம்.

அப்போது நமக்கு நண்பராயுள்ள சைவ வேளாளர் சிலர் வேளாளரின் பண்டை உண்மை வரலாறுகளை ஆராய்ந்து ஒரு கட்டுரை விரைந்தெழுதும்படி எம்மைப் பெரிதுவேண்டினர். பண்டைக்காலந் தொட்டு நம் செந்தமிழ் மக்களில் நாகரிகத்தாற் சிறந்து வாழ்ந்து, தமிழ்மொழியையுஞ் சிவ வழிபாட்டையும் நிலைநிறுத்தி ஆரியரையுந் திருத்தி நல்வழிப் படுத்தினோர் வேளாளரே என்பது எமது ஆராய்ச்சியில் நன்கு புலப் பட்ட மையால், வேளாளர் யாவர்?’ என்பதனை விளக்குகையில் ‘தமிழரது நாகரிகத்’ தையும் உடன் விளக்க வேண்டுவது இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/201&oldid=1591870" இலிருந்து மீள்விக்கப்பட்டது