இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
178
இரண்டாம் பதிப்பு முகவுரை
வ்விரண்டாம்
பதிப்பிற் பல புதியகுறிப்புகள் விரித்தெழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முற்பதிப்பில் இருந்தவைகளிற் சிற்சில திருத்தங்களுஞ் செய்யப்படிருக் கின்றன. இவ்வாறற்றால் இந்நூல் முன்னையினும் ஒருபங்கு
கூடப்பெருகிவிட்டது.
இனித் தமிழருட் சிறந்த வேளாளர் நாகரிகத்தை விளக்கவே தமிழரது நாகரிகமுந் தானே பெறப்படுமாகலானும், முதற் பதிப்புக்கு வைத்த ‘தமிழர் நாகரிகம்' அல்லது 'வேளாளர் யாவர்?’ என்னும் இருபெயர்கள் ருபெயர்கள் வழங்குதற்கு வழங்குதற்கு இடர் பயத்தலானும் இப் பதிப்புக்கு அவ்விரண்டையும் உள்ளடக்கிய 'வேளாளர் நாகரிகம்' என்பதனைப் பெயராக அமைத்தாம்.
பல்லாவரம் கி.பி.1927
மறைமலையடிகள்