உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

1. வேளாளர் வாழ்க்கை

ப்போதிருக்குந் தமிழ்நூல்களில் மிகப் பழையதாகிய தொல்காப்பியத்தில் வேளாளர்களும் அவர்களுக்கே சிறப்பாக உரிய உழவு தொழிலும் ஒருங்கேவைத்துச் சொல்லப் படுதல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. தொல்காப்பியம் ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாகையால், அதிற் குறிப்பிட்ட வேளாளர்கள் அந்நூலுக்கு முற்பட்ட காலத் திலேயே அஃதாவது ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயே உழவு தொழிலைக் கண்டறிந்து பெருக்கி, அதனால் தாமும் நாகரிகத்திற் சிறந்து, பிறரையுஞ் சிறப்புறச் செய்து வாழ்ந்தமை புலனாம். ஆடு மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டு, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோரிடத்திற் குடியேறிக், கடைசியாக இப் பரத நாட்டிற் புகுந்த ‘ஆரியர்’ அஞ்ஞான்று வடக்கே வாழ்ந்த வேளாளரின் உழவு தொழிற் சிறப்பும், அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையுங்கண்டு வியந்து அவ் வேளாளரை அண்டிப் பிழைக்கலாயினர். வேளாளருந் தமக்குள்ள செல்வப் பெருக்காலும், இரக்க நெஞ்சத்தாலுந் தம்பால் வந்து தமது உதவியை அவாவிய ஆரியர்க்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமுந் தந்து பலவாற்றாமலும் அவர்களைப் பாதுகாத்துவந்தனர். ஆகவே, 'வேளாளர்' என்னுஞ் சொல் ‘ஈகையுடையார்' என்னும் பொருளில் அவர்க்கே வழங்கி வரலாயிற்று. 'வேளாண்மை' என்னுஞ்சொல் இங்ஙனம் பண்டுதொட்டு ஈகைப் பொருளில் வழங்குதல், 'வேளாண்மை யுபகாரம் ஈகையும் விளம்பும்' என்னும் பழைய திவாகரச் சூத்திரத்தால் விளங்கும்.

உழவுதொழிலோ மிகவும் வருத்தமான தொன்று, உழவு தொழிலைச் செய்பவர்கட்கே வருத்தம் இன்னதென்பது தெரியும்; அதனைச் செவ்வையாய்ச் செய்து முடிப்பதற்கோ முன்பின் ஆராயும் நுண்ணறிவு வேண்டும். ஆதலால், அதனைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/212&oldid=1591881" இலிருந்து மீள்விக்கப்பட்டது