உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ

வேளாளர் நாகரிகம்

189

பெயராயிற்று. பின்னர் அவ்விரண்டு தொழில்களையும் ஆள்வாரான வேளாளர்’க்கும் அது பெயராயிற்று. இவ் வேளாளர் ஏனை மக்களை நோக்கிச் செய்யும் ஈகையும் விருந்தோம்பலும் ‘மக்கள்வேள்வி' (மாநுடயாகம்) எனவும், ஏனைச் சிற்றுயிர்களைப் பாதுகாத்தற் பொருட்டு அவர் மேற்கொண்டு ஒழுகுங்கொல்லா அறம் 'உயிர்வேள்வி' (பூதயாகம்) எனவும், இறந்து பட்ட தம் முன்னோரை நோக்கிச் செய்யும் நன்றிக்கடன் ‘தென் புலத்தார் வேள்வி' (பிதிர்யாகம்) எனவும், இவ்வாறு பிறர்க்காற்றும் உதவி பயன்தரற் பொருட்டு இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடு ‘கடவுள் வேள்வி (தேவயாகம்) எனவுந் தமக்கும் பிறர்க்கும் அறிவை விளக்கி முயற்சியைப் பயன் பெறுவிக்கும் நூலோதுமுறை ‘கலைவேள்வி’ (பிரமயாகம்) எனவும் ஆன்றோரால் வகுத்துரைக்கப்பட்ட எனவே ஈகையும் ஈகைக்குக் கருவியாவனவும், ஈகையைப் பாராட்டும் நன்றிக்கடனும் ஈகையைப் பயன்படுத்துமாறு வேண்டும் வழிபாடும் 'வேள்வி' என்னும் பெயர்க்கு இயைபுடையவாய் நிற்றல் கண்டுகொள்க. கொல்லா அறம், சிற்றுயிர்கள் தத்தம் உடம்புகளில் நின்று அறிவு விளங்குதற்கு உதவி செய்வதாகலின், அதுவும் ‘வேள்வி' என்னும் பெயர்க்குப் பெரிதும் உரிமை பூண்டு நிற்றல் கண்டு கொள்க. இங்ஙனமாக ஐவகை வேள்விகளையும் ஆள்பவராகலின், பண்டைத் தமிழரில் உழவுதொழிலாற் சிறந்து நாகரிக வாழ்க்கையை வகுத்த நன்மக்கள் ‘வேளாளர்' எனப்படுவாராயின ரென்பது.

_____68T.

உழவு தொழிலை யறிந்து அதனைத் திறமையாகச் செய்யத் தெரியாத காலங்களில், மக்கள் உண்ணப் போதுமான உணவும் உடுக்கச் செவ்வையாக உடையும் இன்றி மிகவும் மிடிப்பட்டு உயிர்வாழ்ந்தனர்; காடுகளிலும் மலைகளிலும் உள்ள மான், மரை, கடம்பை, முள்ளம்பன்றி, ஆடு, மாடு முதலான விலங்கினங்களை அளவிறந்த வருத்தத்தோடு வேட்டமாடிக் கொன்று, அவற்றின் இறைச்சியையும் அரிதிற் கிடைத்த காய் கனி கிழங்குகளையும் அயின்று, தழைகளையும் தோலையும் உடுத்து, நாகரிகம் இன்னதென்றே தெரியாமல் மலைக்குகை களிலும் மரப் பொந்துகளிலும் இருந்து காலங்கழித்தனர். எவ்வளவோ தேடித்திரிந்தும் அவ் விலங்குகளும் காய் முதலியனவும் அகப்படாத காலங்களிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/214&oldid=1591883" இலிருந்து மீள்விக்கப்பட்டது