உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

191

ஒன்றன்மேலொன்றாய்ப் பெருகாலாயின. இன்னும் மிகுத்துக் கூற வேண்டுவதென்! இஞ்ஞான்றை மக்கட்கு வந்தள்ள நாகரிக வாழ்வெல்லாம் பண்டும் இன்றும் வேளாளர் கண்டறிந்து நடாத்தும் உழவினால் வந்தனவே யாமென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இங்ஙனம் எல்லாத் தொழிலுஞ் சிறந்ததாய் எல்லார் உயிர்வாழ்க்கைக்கும் இன்றியமையாததாய் உள்ள உழவு தொழிலைப் பண்டுதொட்டு நடாத்திவரும் வேளாளர் கொலையும் புலையும் நீக்கி நாகரிகத்திற் சிறந்தாராய் விளங்குதலின் அவரது பெருமை பழைய நல்லாசிரியர் இயற்றிய தமிழ் நூல்களிற் பாராட்டப்பட்டிருப்பதோடு, அஃது இன்றுகாறும் மங்காது ஏனை யெல்லா வகுப்பினர்க்குரிய பெருமையினும் மிக்கு விளங்காநிற்கின்றது. இவர்கள் தமக்குள்ள அறிவின் றிறத்தாற், காலமறிந்து நிலத்தைத் திருத்தி வளம்படுத்தி நெல் முதலான நன்செய்ப்பயிரும் துவரை முதலான புன்செய்ப் பயிரும் விளைவித்து, அவற்றால் வரும் பயன்களைத் தாமும் உண்டு பிறரும் உண்ணக் கொடுத்து, யாடு மாடு மீன் முதலான மற்றை உயிர்களைக் கொல்லாமலுங், கான்று அவற்றின் ஊனைத் தின்னாமலும் அருளொழுக்கத்தில் இன்று காறுந் தலை நின்று வருகின்றார்கள். இவர்களது உண்மைப் பெருமையினை யுள்ளவாறுணர்ந்தே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

6

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி”

எனவும்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்.

எனவும்,

66

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்

எனவும்,

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/216&oldid=1591885" இலிருந்து மீள்விக்கப்பட்டது