உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

6 எனவும்

மறைமலையம் - 29 -

அருளிச் செய்தனர். ஏனைத் தொழில்

செய்வாரெல்லாந் தம துயிர்வாழ்க்கைக்கு வேளாளரையே நாடி நிற்றலின் அவரை “உலகத்தார்க்கு ஆணி” யென்றார்.பிற தொழில்களைச் செய்வாரெல்லாம் பிறரிட்ட ஊழியஞ் செய்து அவரைத் தொழுது கொண்டு செல்பவராயிருக்க, வேளாளரோ பிறரெவர்க்கும் ஏவல் புரியாராய்ப் பிறரைத் தம் ஏவல் வழி நிறுத்தித் தமதுரிமையில் மேம்பட்டு வாழுமியல்பின ரென்பது தெரிப்பார் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்றார்; உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத எல்லாப் பொருள் களையும் வேளாளரே விளைப்பவராயிருத்தலின் அவர் பிறரிடத்துச் சென்ற இரந்து பெற்றுக் கொள்ள வேண்டுவது எதுவும் இன்றென்பதுந், தம்மை வந்து இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயவல்ல ரென்பதும் உணர்த்துவார். "இரவார் இரப்பார்க்கொன்றீவர்” என்றார்; இதனால் இரத்தற் றொழிலையே தமக்கு இயல்பாகவுடைய பார்ப்பன மாந்தரும் பிறரும் வேளாளரைச் சார்ந்தே பிழைப்ப ரென்பது பெற்றதாம்.

இனி, ஐம்புல அவாக்களைத் துவரத்துறந்த துறவோரது தவவொழுக்கமும் வேளாளரது உதவி ல்லையானின் நிலைபெறா தென்பார்,

“உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம், விட்டேமென் பார்க்கு நிலை”

என்றார், இனித் தமது வெண் கொற்றக்குடை நீழலில் உலகத்தைப் பாதுகாக்கும் அரசரது அரசவாழ்க்கையும் வேளாளர்தம் வேளாண் வாழ்க்கையின் கீழ் அடங்கும் என்பதனையும் விளக்கிப்,

“பல குடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.’

என்று ஓதிய தெய்வத் திருவள்ளுவர் கருத்தை உற்று நோக்கின் வேளாளரினுஞ் சிறந்த இனத்தினர் வேறில்லை யென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கும். இங்ஙனங் கூறிய திருவள்ளுவநாயனார் கருத்துக்கு இணங்கவே பண்டைத் தமிழ்ப் பாட்டாகிய பட்டினப்பாலை யுள்ளும் அதன் ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/217&oldid=1591886" இலிருந்து மீள்விக்கப்பட்டது