உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

197

யிருக்கின்றார்கள். தமது தாளாண்மையாற் கொலைபுலை கடிந்து ஈகை அறங்களை இத்தமிழகத்தில் நிலை நிறுத்தின வர்கள் வேளாளர் ஒருவரேயாதல் நன்குணர்ந்தே சைவ சமயாசிரியருள் முதல்வரான திருஞான சம்பந்தப் பெருமானும், “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே”

என்று திருவாய் மலர்ந்தருளினர்.

இத்துணைச்

பிறப்பிடமாய்,

சிறந்த வேளாளர்

நாகரிகத்திற்குப்

ஏனை நாகரிக வகுப்பினர் எல்லாருந் தோன்றுதற்கு முற்றோன்றினவராய் இருத்தலின், இவர்கள் ஆரியர் கூறிய பிரம்ம சத்திரிய வைசியசூத்திரர் என்னும் நால்வகை வகுப்பினுள் ஒன்றினும் அடங்காராய் அந் நால்வகையினர்க்கும் முற்பட்டாராய்ச் சிறந்து விளங்குதல் நடுவு நின்று ஆராய்வார்க்கு நன்கு விளங்கும்.

இவ் வேளாளர்

ளாளர் அன்பிலும் அறத்திலுஞ் சிறந்து நின்றாராதலின், எத்தகையோராயினும் எவ் வகுப்பினராயினுந் துன்புறக் கண்டால் அத் துன்பத்தை நீக்கும் பொருட்டுத் தமக்குள்ள பொருள்களையுஞ், சில நேரங்களில் தமது உயிரையுங் கூடக் கொடுத்துதவும் அத்துணை இரக்கநெஞ்சமும் அன்புங் கண்ணோட்டமும் உடையரென்பது இவர் தம் வரலாறுகளை ஆராய்தலால் நன்கு விளங்காநிற்கும். விருந்தினரை அகமும் முகமும் மலர்ந்து ஏற்று அவர்க்கு வேண்டுவன வெல்லாஞ் செய்து அவரை உவப்பித்தல் இவரது இயற்கை இஃது,

66

"இன்மையாற் சென்றி ரந்தார்க்

கில்லையென்னாது ஈந்து உவக்குந்

தன்மையார் ஆக்கூரிற்

றான்றோன்றி மாடமே

என்னுந் திருஞானசம்பந்தப் பெருமான் அருளுரையால்

தெளியப்படும்.

அடிக்குறிப்பு:

1.

மனு 3, 64; 10, 83 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/222&oldid=1591891" இலிருந்து மீள்விக்கப்பட்டது