உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

5. ஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ்

சிவத்தையும் இகழ்தல்

இன்னும், ஆரியப் பார்ப்பனர் தமக்குப் பல்வகையால் உதவியாற்றிவருந் தமிழ்மக்களெல்லாரையும் ஒரு தொகைப் படுத்துச் சூத்திரர் என்று இகழ்தல் அல்லாமலும், ஆரியர்க்கு முன்னே தொட்டுத் தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வரும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானையுஞ் சூத்திர தெய்வமென இகழ்ந்துவருவதுடன், அதனைத் தமது வசிட்ட மிருதி நூலிலும் எழுதிவைத்திருக்கின்றார்கள். தமிழ்மொழி அவர்கட்கு எட்டிக்காயினுங் கசப்பதாகும். இறந்துபட்ட தமது சமஸ்கிருத மொழியினையுஞ், சில நூற்றாண்டுகட்கு முன் தோன்றிப் பல மொழிக் கலப்புடையவாய் வழங்கும் ஆங்கிலம் இந்தி முதலான மொழிகளையும் எவ்வளவு உயர்த்துப் பேசவேண்டுமாயினும் அதற்கு மடிகட்டிநிற்பர். இன்னகாலத்திற்றான் தோன்றிய தென்று கூறுதற்கு ஆகாத அத்துணைப் பழமையுடையத்தாய்ப், பண்டைக்காலத்திலேயே இலக்கண இலக்கிய வரம்புபெற்று, எல்லா வளங்களும் நிரம்பி இன்றுகாறும் நடைபெறாநின்ற தமிழையுந் தமிழ்நூல்களையும் அவை கற்றாரையுங் கண்டாற் சூத்திரபாஷை சூத்திர நூல்கள் சூத்திரப் படிப்பாளிகள் என்று கழ்ந்து முகஞ்சுளித்துப் போவர்.

பிறந்தவர்களாயிருந்தும்

த் த் தென்றமிழ் நாட்டிற் இவ்வாரியப் பார்ப்பனர்.வடநாட்டிலுள்ளவர்களையும் அவர்கள் தம்முடைய மொழிகளில் எழுதிவைத்திருக்கும் நூல்களையுமே எந்நேரமுங் கொண்டாடுவர். இவர்களிற் சிற்சிலர் தமிழ் மொழியைக் கற்றுத் தமிழ்ப்புலவரா யிருந்து பொருள் தேடினும், இவர்களை நெருங்கி ஆராய்ந்தால் இவர்களுந் தமிழையுந் தமிழ்நூல்களையுந் தமிழரையும் இகழ்பவராகவே காணப்படுகின்றனர்; அதனால், இவர்கள் தமிழ்கற்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/236&oldid=1591906" இலிருந்து மீள்விக்கப்பட்டது