உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

6. வேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையும் கொண்டாடல்

இனி, வேளாளர்களோ

வென்றால்

வந்தேறுங் குடிகளாய்ப் போந்த ஆரியப் பார்ப்பனர்களை அகமும் முகமும் மலர்ந்தேற்று அவர்க்கு வேண்டுஞ் சிறப்புக்களை யெல்லாம் ன்றுகாறும் இன்னும் மனங் கோணாமலே செய்து

வருகின்றனர்.பழையநாளில்

6

கின்றனர். பழையநாளில் வந்த ஆரியர் இருக்க நிலங்களும் இல்லங்களும் உயிர் வாழ்க்கைக்குக் கழனிகளும் பொருள்களும் வேளாளர் வழங்கியிருக்கின்றனர். தமது நூன்முறைப்படி வேளாளர் ஆரியப் பார்ப்பனரைக் குரவராகக்கொள்ளக்கூடா திருந்துந், திருமணக் காலங்களிலுந் தென்புலத்தாரை வணங்குங் காலங்களிலுந் திருக்கோயில் வழிபாடு செய்யுங் காலங்களிலும் பிற சிறப்பு நாட்களிலும் அவர்களையும் வருவித்துத், தம் தமிழ் அந்தணர்க்கு அடுத்த நிலையில் அவரையுங் குரவராக வைத்து அவர்க்கும் வேண்டுவனவெல்லாங் கொடுத்து வந்தனர்; இன்றுங் கொடுத்து வருகின்றனர். சைவசமய ஆசிரியர்கள் தமிழைச் சிறப்பித்துக் கூறும் இடங்களில் ஆரியத்தையும் உடனெடுத்துச் சிறப்பித்து அருளிச்செய்கின்றனர்; தமிழ் நான்மறைகளைச் சிறந்தெடுத்து ஓதுகின்றுழி ஆரிய வேதங் களையும் உடன்வைத்துச் சிறப்பித்துப் பாடியிருக்கின்றனர்; தமக்குரிய இசைக்கருவியாகிய 'யாழ்' என்பதனைக் குறித்துச் சொல்லுங்காற் கூடவே ஆரியர்க்குரிய ‘வீணை’ யையும் உ

ன்

வைத்துச் சொல்கின்றனர். இங்ஙனமெல்லாம் பலகாலும் பலவிடத்துந் தமிழ்ச் சான்றோர் தம்மால் உயர்த்துப் பாராட்டப்படுதற்குரிய தகுதியில்லாத ஆரியரையும் அவர்செய்த நூல்களையும் அருண்மிகுதியால் உயர்த்துப் பாராட்டுதல் போல, ஆரியருள் எவரேனுந் தமிழரையும் அவரியற்றிய அரும் பெரும் நூல்களையும் பாராட்டித் தம்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/239&oldid=1591912" இலிருந்து மீள்விக்கப்பட்டது