உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் – 29 -

நடுநாடாகிய மைசூரில் இப்போது ‘துவாரசமுத்திரம்' என வழங்கும் ‘துவரை நகரை' வேளிர் அரசர் நாற்பத் தொன்பது தலைமுறை செங்கோல் செலுத்தி வந்தனரென்பதும், அவருள் இறுதியாக வந்தோன் இருங்கோவேள் என்னும் மன்னனாம் என்பதும் புலப்பட,

“நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்புனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே.

3

என்று கபிலர் கூறுதல் காண்க. இது கொண்டு, பண்டை நாளில் தென்னாட்டிலும் வடநாட்டிலும் பரவியிருந்த வேளாளரும், அவருள் அரசராயிருந்த வேளிரும் நாகரிகத்திற் றலைசிறந்தவரா யிருந்தமையின், தாம் ஒருவரை யொருவர் மறவாது, வடநாட்டிலுள்ளார் தன்னாடுபோந்தும், தென்னாட்டில் உள்ளார் வடநாடு சென்றும் இடையிடையே உறவுகலந்து வந்தமை தெற்றென விளங்கா நிற்கும்.

இங்ஙனமாகத் தமிழரில் மிகச் சிறந்த வேளாளர் இவ் இந்திய நாட்டில் வடபால் எங்கும் பண்டைக்காலத்திற் பரவி யிருந்தன ரென்பதற்கு, மகதநாட்டை ஆண்ட ஆந்திரர் பேசிய தெலுங்கு மொழியும், நருமதையாறு பாயும் இடங்களிலும் நாகபுரியின் வடக்கிலுமுள்ள கோண்டு மொழியும், இராசமகல் மலைச்சாரல்களில் வழங்கும் இராசமகல், ஊராவோன் மொழி களும் இவ்விந்தியாவின் வடமேற்கெல்லையிலுள்ள பெலுசித்தான மலைப்பக்கங்களிலுள்ள குன்றவர் வழங்கும் பிராகுவி மொழியும், இமயமலைச் சாரலிலும் வடகிழக்கு நாடுகளிலும் பேசப்படும் மொழிகள் சிலவுந் தமிழ்மொழியோடு இனம் உடையவை களாயிருத்தலே ஒரு பெருஞ் சான்றாம் என்க.

அடிக்குறிப்புகள்

1. வேளிர் வரலாறு, 1916 பக்கம் 14.

2. நேரிமலை என்பது விந்தயமலை; 'கல்லாடம்' 2.

ன்

3.

புறநானூறு, 201.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/249&oldid=1591932" இலிருந்து மீள்விக்கப்பட்டது