உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

10. வேளாளர் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவுநூல்கள் இயற்றினமை

கொலை புலை தவிர்ந்த அருளொழுக்கத்தில் நிலை பெற்று நிற்கும் வேளாளர், கொலை புலை கட்குடி முதலிய தீவினைகளைப் பெருக்கி ஆரியர் கொண்டாடிய வெறியாட்டு வேள்விகளில் மிக வெறுப்புக்கொண்டு அவ்வேள்விகளை அழித்தற்கும், அவை செய்வதில் உறைத்து நின்ற ஆரியரோடு போர்புரிந்து அவரை அடக்குதற்கும் முன்நின்றமை ஒரு ம் வியப்பன்று.இங்ஙனத் தாஞ்செய்த வெறியாட்டு வேள்விகளை அழித்தமைபற்றியே அவ்வாரியர் பெரிதுஞ் சினங் கொண்டு அவ் வேளாளரையும் அவருள் அரசரான வேளிரையுந் தாசியர், இராக்கதர், அசுரர் என்று இகழ்ந்து கூறி, அவரைத் தாழ்த்துதற் பொருட்டுப் பொய்யான பல புராணக் கதைகளையும் எழுதிவைப்ாராயினர். ஆரியர் இங்ஙன மெல்லாம் நூல் வழியாலும் பல கொடுமைகளைச் செய்து வரவே, அவர் எழுதிய அந்நூல்களில் பொய்ம்மையும் அவர் தம் பொருந்தாச் செயலும் எல்லார்க்கும் விளக்கல் வேண்டி, அவர்க்குரிய ஆரிய மொழியைத் தமிழ வேளாளராகிய தாமுங் கற்றுக் கொலை புலை கட்குடி மறுத்த தமதுயர்வுந், தாம் வழிபடும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் அருட்சிறப்பும், அவனை யடைதற்குரிய மெய்யுணர்வின் மாட்சியுந் தெளித்து இருக்கு எசுர் சாம அதர்வண வேதப்பாட்டுகள் சிலவும், உபநிடந்தங்கள் சிலவும், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், யோகம், வேதாந்தம் முதலிய ஐந்து மெய்யுணர்வு ஆராய்ச்சி நூல்களும், இதிகாசங்கள் புராணங்கள் சிலவும் இயற்றி யிட்டார்கள்.

ஆரிய மொழியில் தமிழர் இயற்றிய இந் நூல்களிலும் பாட்டுகளிலும், உயிர்களைக் கொன்று செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/255&oldid=1591944" இலிருந்து மீள்விக்கப்பட்டது