உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

265

க்

கூறியிருக்கின்றனர். இவ்வாறு கூறியவிடத்தும் வேளாண்குலம் என வாளா கூறாது, அக் குலத்தவர் மெய்ம்மையே பேசும் இயல்பினர் என்பது புலப்பட ‘வாய்மை', 'நம்புவாய்மையின் நீடு' என்னுஞ் சொல்லையுஞ் சொற்றொடரையும், அவர் பொருந்திய தகுதிப்பாடு உடையர் என்பது விளங்க 'மேதக்க’ ‘தகவுடைய’ என்னுஞ் சொற்றொடர்களையும், இக் குலஞ் சிறந்தது என்பது தெரிக்க ‘விழுமிய' என்னுஞ் சொல்லையும், இக் குலத்தவர் ஈகையிற் சிறந்தவர் என்பது புலனாக 'வேளாண்மையில் உயர்ந்த' என்னுந் சொற்றொடரையும், இக் குலத்தவர் சிவபிரான் ஒருவற்கே வழிவழி யடிமைசெய் தாழுகுங் குறையா இயல்பும் பற்றும் உடையர் என்பது நன்குணர்த்த ‘நஞ்சையமுது செய்தவருக்கு, இம்பர்த் தலத்தில் வழியடிமை என்னுங் குன்றா இயல்பில் வருந், தம் பற்றுடைய என்னுஞ் சொற்றொடரையும் வேளாளர் தொன்று தொட்டுப் பெரும் பொருட்டிரள் உடைய மிக்கசெல்வ வாழ்க்கையினர் ய என்பது தெளிவுறுத்தத் 'தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய' மிக்க செல்வத்து” என்னுஞ் சொற்றொடரையும், வேளாள குலந் திருத்தமானது என்பது தெருட்டத் “திருந்து” என்னுஞ் சொல்லையும், வேளாள குலம் ஏனை எல்லாக் குலங்கட்குந் தலைமையானது என்பது அறிவுறுத்த “வேளாண் தலைக்குடி என்னுஞ் சொற்றொடரையும் ஆசிரியர் சேக்கிழார் அடைகளாகப் புணர்த்தி வேளாண் குலத்தின் உயர்வைப் பலவாற்றானும் நன்கு விளக்கியிருக்கின்றனர். இத்துணைச் சிறந்த உயர்வுடையதாகத் தம்மாற் கூறப்பட்ட வேளாளர் குலத்தை இழிந்த சூத்திர குலமாகக் கூறுவது சேக்கிழார் திருவுள்ளக் கருத்தாகுமா என்பது ஆராயற்பாலதன்றோ? சூத்திரராவார் இன்னர் என்பது மநுவினால் நன்கு காட்டப்பட்டிருக்கின்றது.

66

""

"சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொணரப் பட்டவன், அன்புடன் ஊழியஞ் செய்பவன், தன்வேசி மகன், விலைக்குக் கொள்ளப்பட்டவன், ஒருவனாற் கொடுக்கப் பட்டவன், குலவழியே தொன்று தொட்டு ஊழியஞ் செய்பவன், குற்றத்திற்காக வேலை செய்பவன் எனச் சூத்திரர் எழுவகைப்படுவர்” எனவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/290&oldid=1592014" இலிருந்து மீள்விக்கப்பட்டது