உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 29

மட்டும் அங்ஙனம் மறைவில் வைத்து விளக்குவதன்றாய், எல்லார்க்கும் புலனாமாறு அவற்றை இலக்கண வகையால் எடுத்து விரித்து விளக்குவதொன்றாய்த், தமிழ் கற்பார் த்திறந்தவராயினும் அவர் எல்லார்க்கும் இன்றியமையாப் பெருநூலாய் இருந்தமையின், அதனைக் குமரிநாட்டில் இருந்தார் மட்டுமேயன்றி, அதற்கு வடக்கின்கண்ணதான இத்தமிழ் நாட்டிலிருந்தாரெல்லாருங்கூடப் பாதுகாத்துவந்தனர். அதனாற் குமரிநாட்டோடு உடனழியாது எஞ்சி நின்ற இத்தமிழ்நாட்டில் தொல்காப்பியம் இன்றுகாறும் வழங்கப் பெறுவதாயிற் றென்க.

பயின்று

பண்டைக் குமரிநாட்டில் இருந்தாரைப் போலவே, இவ்வுலக வாழ்வில் மயங்கி அருளொழுக்கத்தையுங் கடவுள் வழிபாட்டையுங் கைவிட்ட எகுபதியர், சாலடியர், அசீரியர், எபிரேயர், பெரூவியர், மெக்சிகர், கிரேக்கர், உரோமர் முதலான பழைய நாகரிக மக்களெல்லாருந், தம் நாகரிக வாழ்க்கையின் உச்சியைத் தொட்டுத் தலைதடுமாறிய சில பல நூற்றாண்டு களுக்குப் பின், கடவுளது சினத்தால் அழிக்கப்பட்டு மறைந்தமை அவர்தம் வரலாறுகளால் நன்கறியப்படும்.வடநாட்டிற் குடிபுகுந்த ஆரியரும் இங்ஙனமே தமது நாகரிக வாழ்வில் மயங்கத் தலைப்பட்டதும், அலக்சாந்தர் முதல் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்த அயல் நாட்டரசரால் அலைக்கப்பட்டுத் தமதுரிமை யெல்லாம் இழந்து நிற்றல் காண்க. இத் தமிழ்நாட்டிற் செங்கோல் ஓச்சிய சேர சோழ பாண்டியர்கள் வேற்றரசரால் வெல்லப்படாத அத்துணை வலிமையுடையராய் ஐயாயிர ஆண்டுகளுக்குமேல் அரசு புரிந்தும், பின்னர் ஆரியர் மாயத்துள் அகப்பட்டு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டுச் சிவத்தை மறந்தமையினாலே தான் அவர்களும் இப்போது இல்லாதே போயினர். மாணிக்கவாசகருந் திருஞானசம்பந்தரும் புத்தர் சமணர்களைவென்று, சைவ சமயத்தை உயிர்பெற்று எழச் செய்தபின், ஆரியப்பார்ப்பனர் அதுவே வாயிலாகத் தமதுயர்வை நாட்டவுஞ் சிவத்தை மறைக்கவும் முயன்ற தீய முயற்சிக்கு ஒத்து நின்றமையினாலேயே சைவமக்கள் தேவாரப் பதிகங்கள் எண்ணிறந்தவற்றை இழந்து தமது பெருமையிலுங் குன்றிப் போனார்கள்! இங்ஙனமே தமிழையுஞ் சிவத்தையும் மறந்தமையால் தமிழர்கள் நாளடைவில் இழந்துபோன நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/305&oldid=1592065" இலிருந்து மீள்விக்கப்பட்டது