உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் - 29

நாட்குமுன்னரே எடுத்துக்காட்டி விளக்கியிருக்கின்றேம். அதுவேயுமன்றிப், 'பிரயோக விவேக' நூலாசிரியர் வடமொழியில் தமிழ்ச் சொற்கள் உண்டென்பதனை உடன்பட்டு அவற்றுட் சிலகாட்டுதலானும், இன்னோரன்ன மொழி நூலாராய்ச்சியில் மிகச் சிறந்த அறிவினராய் விளங்கிய கால்ட்வெல் ஆசிரியர் வடமொழி இலத்தீன் கிரீக் முதலான பல மொழிகளிலும் புகுந்து வழங்கிய பன்னூறு தமிழ்ச் சொற்களை நன்கெடுததுக் காட்டி விளக்குதலானும் எமதுரை யுண்மையாதல் கண்டு கொள்க. இதுகாறுங் கூறியது கொண்டு, 'வேதம்' என்னுஞ் சொல் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் களைக் கூறும் நான்கு தமிழ் வேதங்களையே உணர்த்தலும், அதனடியாகப் பிறந்த 'வேதியர்' என்னுந் தமிழ்ச் சொல்லும் அத் தமிழ் நான்மறைகளை யுணர்ந்த வேளாள அந்தணரையே குறித்தலும் நன்கு பெறப்படுதலால், திருஞானசம்பந்தப் பருமான் தாம் அருளிச் செய்த திருவாக்கூர்த் தேவாரத் திருப்பதிகத்திற் குறிப்பிட்ட வேளாளரை ஆசிரியர் சேக்கிழார் 'வேதியார்' எனக் கூறியதில் ஏதும் மாறுபாடில்லையென உணர்க; ஆண்டுக் குறிப்பிடப்பட்ட ‘வேதியர்’ இக் காலத்துப் பொருந்தா வழக்குப் பற்றி ‘ஆரியப் பார்ப்பனர்' என்று பொருள் பண்ணிக் கொண்ட எதிர்ப்பக்கத்தவர் கொள்கையே பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க. ஆரியப் பார்ப்பனரை ஈகையிற் சிறந்தாராகக் கூறுந் தமிழ் நூல் வடநூல்கள் யாண்டுங் காணப்படாமையின் ஈ ஈகையிற் சிறந்த மாட்சியை வேளாளர்மேல் வைத்துப் பாடிய திருஞானசம்பந்தப் பெருமானது திருவாக்கூர்ப் பதிகத்தை இரத்தற் றொழிலையே கடனாக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்மேல் வைத்துரைத்தல் சேக்கிழார் திருவுள்ளக் கருத்தாகா தென்றொழிக.

அற்றேற், பழைய தமிழ நூலாகிய 'திவாகரம்” “ஆதி” நூலென்பது வேதநூற் பெயரே” என்று ஓதிப், பின்னர் அதனை ஆரியவேதங்களாகிய இருக்கு முதலியவற்றின்மேல் வைத்துக் கூறுதல் என்னையெனின்; 'திவாகரம்' மிகப் பழமையான தமிழ்நூல் அன்று. அது கடைச்சங்க காலத்து நூல்கட்கும், மாணிக்கவாசகப் பெருமான் காலத்திற்கும், 'பிருகற்பதி’ காத்தியாயநம்' 'பராசரம்' முதலிய மிருதி நூல்களின் காலத்திற்கும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் உண்டான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/307&oldid=1592075" இலிருந்து மீள்விக்கப்பட்டது