உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

“பிரமம்” “நாரதீயம்’ வாமநம்’ வராகம்'

283

பாகவதம்'

வைணவம்' முதலான புராணங்களின் காலத்திற்கும் பிற்பட்டதொன் றென்பதற்கு, அது பிற்சொல்லிய நூல்களை இறுதித் தொகுதியிற் குறிப்பிடுதலே சான்றாம். அஃது அன்னதாதலை 'மாணிக்கவாசகர் காலம்' என்னும் எமது நூலுள் விரித்து விளக்குதும், ஆண்டுக் கண்டுகொள்க.

இனித், திவாகரமுனிவராய் சிறப்பித்துரைக்கப்பட்ட 'அம்பற்சேந்தன்' என்னும் மன்னன் கடைச்சங்க காலத்தவன் என்றும், அதனால் திவாகரங் கடைச்சங்க காலத்தே இயற்றப் பட்ட தொன்றாம் என்றுங் கூறினாரும் உளர். அவர் கூற்றுப் பொருந்தாது. ‘சேந்தன்' என்னும் அரசன் பெயர் கடை ச்சங்க காலத்து நூல்களில் யாண்டுங் காணப்படவில்லை. ‘அம்பர்கிழான் அருவந்தை' என்னும் ஓர் அரசன் பெயரும், அவன்மேற் பாடப்பட்ட செய்யுள் ஒன்று மட்டும் புறநானூற்றிற்,' காணப் படுகின்றன. அம்பர்கிழான் அருவந்தை' என்னும் பெயர்க்குமேற் 'சேந்தன்' என்னும் பெயருஞ் சேர்ந்த தொடர் மொழி கடைச் சங்ககாலத்து நூல்களிற் காணப்படாமையின், ‘அருவந்தை’ என்னும் மன்னனே அச் சங்ககாலத்தவனென்பது பெறப்படு மல்லது, சேந்தனும் அக்காலத்தவனென்பது பெறப்பட மாட்டாது. அற்றேல், “ஆடவர்” திலகன் அம்பன் மன்னன், ஈடிசைத் தலைவன் அருவந்தைச் சேந்தன்” என்று திவாகரங் கூறுதல் என்னையெனின்; அம்பல நகரை அரசாண்ட அருவந்தை என்னும் அரசன் கால்வழியில் வந்தோன் சேந்தன் என்பதே அதற்கும் பொருளாகலின் ‘அருவருதைச் சேந்தன்’ என அஃது அவ் விருவரையும் ஒருங்குசேர்த்து ஓதுவாயிற் றென்க.எனவே, அம்பல்நகரை ஆண்ட அருவந்தை என்பவன் வேறு, அவன் வழியில் வந்து பின்னர் அதனை ஆண்ட சேந்தன் என்பவன் வேறென்பதே துணியப் படுமாகலிற், சேந்தன் சங்ககாலத்தவன் அல்லனென்பதூஉம் அல்லனாகவே அவன் காலத்தாகிய 'திவாகரமும்' சங்ககாலத்து அன்றென்பதூஉம் உடன் துணியப்படுமென்க.

அற்றேற், கடைச்சங்க காலத்தவளாகிய ஒளவையாற் பாடப்பட்டவன் சேந்தன் என்பது போதர ‘ஒளவை பாடிய அம்பற் கிழவன், தோன்றாச் சேந்தன்’ என்று திவாகரங் கூறுதல் என்னையெனின்; ஔவை யென்னும் பெயர் கொண்ட பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/308&oldid=1592080" இலிருந்து மீள்விக்கப்பட்டது