உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

|–

அப்பாத்துரையம் – 41

கவிஞன் நம்மிடம் எழுப்ப வேண்டும் வியப்பதிர்ச்சி சிறப் பருமை சார்ந்ததா யிருக்கக்கூடாது; செழுங்கொழுமைச் சிறப்பு வாய்ந்ததாயிருக்க வேண்டும். நம் எண்ணங்களைத் தக்க சொல்லால் நினைவூட்டுவதாகவே இருக்க வேண்டும்.

கவிஞர் கீட்ஸ்

எல்லாக் கவிஞர்களும் வெறிகொண்ட பித்தர்களே.

கலைகளில் தலைமூத்த கலை, பல

தாய்க்கலை கவிதை!

ராபர்ட் பர்ட்டன்

கலைகளுக்கும்

கவிதையை இசைபயில் எண்ணம் என்னலாம்.

கவிதை என்பது அழகிலுறையும் வாய்மை.

காங்கிரீங்

கார்லைல்

கில்ஃவில்லன்.

கவிதை, உரைநடையைவிட, சில சொற்களுள் பல் பொருள்

கூறுகிறது.

வால்ட்டேர்

கவிதை என்பது கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடல்ல; உணர்ச்சியின் பிடிப்பிலிருந்து விடுபடுவதேயாகும்.

டி. எஸ். எலியட்

கவிஞனின் திறம் பொருளில் ஒரு சிறிது விளக்காது விட்டு மறைப்பதனால் செறிவளிப்பதேயாகும். அவன் அழகின் திரையை விலக்க முற்பட்டாலும் முழுதும் விலக்குவதில்லை.

ஈ. பி. ஒயிட்

குவெபெக் வெற்றியைவிட நான் பெருமை கொள்ள

விரும்புவது கவிதை எழுதுவதாகும்.

படைத்தலைவர் உல்ஃவ்