உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

285

வழங்கிய

ஆகவே, பண்டைக்காலத்திற் றமிழில் நான்மறைகளே 'நால்வேதங்கள்' எனக் கூறப்பட்டன வெண்பதூஉம் அவ் வேதங்களைப் பயிலுதற்குங் கடவுள் வழிபாடு ஆற்றுதற்குமாக வேளாளரினின்றும் பிரித்து ஒரு தனி வகுப்பினராக வைக்கப்பட்ட தமிழ் அந்தணரே 'வேதியர்' என ஆசிரியர் சேக்கிழராற் சொல்லப்பட்டன ரல்லது அவர் ஆரியப் பார்ப்பனராதல் பற்றி அப் பெயராற் கூறப்பட்டன ரென்பது பொருந்தாதாமென்பதூஉம், இங்ஙனங் கொள்ளாக்கால் திருவாக்கூரிலிருந்த அந் நன்மக்களை வேளாளரெனவே வளிப்படையாகக் கூறிய திருஞானசம்பந்தப் பெருமான் திருமொழியொடு முரணிச் சேக்கிழார் கூற்றும் வழுவுடைத் தாய் முடியுமென்பதூஉம் நன்கு பெறப்படுதல் காண்க. இவ்வாறெல்லாம் பெறப்பட்டதன் முடிபாய், எவ்வாற்றானும் உயர்ந்த தமிழ நாகரிக நன்மக்களாகிய வேளாளரைச் சூத்திரரென இழித்துக் கூறுதல் வேளாண்டலைவராகிய சேக்கிழார்க்கும் ஆசிரியர் தொல்காப்பியர் முதலான ஏனைத் தொல்லறிவாளர்க்குங் கருத்தன் றென்பதூஉம் இனிது விளங்குமென்க.

அடிக்குறிப்புகள்

1.

2.

அதர்வதேவம், 10, 7, 20

புறநானூறு, 2,

3. புறநானூறு, 6,

4.

புறநானூறு,9,

5. சிலப்பதிகாரம், 11, 17, 20

+ ம் ம்

6.

7.

8.

தொல்காப்பியம், எழுத்ததிகாரம் சூ. 14, 15, 16, 17

புறப்பொருள் வெண்பாமாலை 10, 11

வேதம் என்பது வே' என்னும் முதனிலையிற் பிறந்த தமிழ்ச் சொல்லாயின, அதற்குப் பகுபத இலக்கணம் யாது? என்றொருவர் எம்மை வினாயினார். 'வே' என்பது பகுதி (முதனிலை), 'அம்' என்பது விகுதி (இறுதிநிலை), த் என்பது இடையே, எழுத்துப்பேறு அல்லது விரித்தல். அற்றேல், 'வேய்தல்’ என்பதில் முதனிலை 'வேய்' என நின்றாற்போல 'வேதம்' என்பதன் கண்ணும் ‘வேய்தம்' என நிற்றல் வேண்டுமாலெனின்; அறியாது கூறினாய்; ஒருமுதனிலை ஒரு பொருளை யுணர்த்துங்கால் ஒரு வகையான எழுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/310&oldid=1592090" இலிருந்து மீள்விக்கப்பட்டது