உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

22. மக்கட் பிறவியின் இழிவும் ஒப்பும்

பதினெண்

இனி, வேளாளர் அல்லாத ஏனைப் வகுப்பிலுள்ள மக்களிற் கொலை புலைதவிர்த்து கல்வியறிவு ஆற்றல்களினும் நாகரிகத்தினும் உயர்ந்து வருவாரை வேளாள வகுப்பினர் தம்மினத்திற் சேர்த்துக் கொள்ளலாமோ? என்று நிகழும் வினாவினையுஞ் சிறிது ஆராய்வாம். மக்களின்

6

தோற்றத்தையும் அவர்தம் நாகரிக வளர்ச்சியையும் ஆராய்ந்துரைக்கும் உண்மை நூல்களை' நாம் பயின்றறியுங் கால், மிகவும் பழையதாகிய காலத்தில் மக்கள் எல்லாரும் விலங்கினத்தோடொத்த அறிவுஞ் செயலும் உடையராய்த் தினைத்துணையும் நாகரிகம் அற்ற நிலையில் இருந்து, பின்னர் அறிவு வளரவளரச் சிறிதுசிறிதாக நாகரிகத்திலும் வளர்ந்து வரலாயினரென்னும் உண்மை நன்கு விளங்கும். இப்போதுங் கூடப் பிள்ளைப் பருவத்தில் இருக்கும் நாட்களில் எல்லா இனத்துப் பிள்ளைகளும் ஏறக்குறைய ஒத்த இயற்கை யுடையராகவே காணப்படுகின்றனர். பின்னர் வளருந்தோறுந் தாந்தாஞ் சார்ந்த முதுமக்களின் பழக்க வழக்கங்கள் பேச்சுகள் முதலியவற்றைத் தழுவி, அவற்றிற்கு ஏற்ற அறிவுஞ் செயலுந் தன்மைகளும் உடையராய்ப் பல்வேறு இனங்களாகப் பிரிபடுகின்றனர். மக்கள் எல்லாரும் புழைகள் ஒன்பதின் வாயிலாக வெளிவரும் மலங்களும் முடைநாற்றங்களும் உடையர்; பசியும் நீர் விடாயும் எல்லாரையும் வருத்துகின்றன; எல்லார்க்கும் நோயுந் துன்பமுங் கவலையும் நரை திரை மூப்புச் சாக்காடுகளும் உள்ளன; சில நேரங்களில் நல்ல இயல்புகளுஞ் சில நேரங்களில் தீய இயல்புகளும் எல்லாரிடத்தும் நிகழ்கின்றன. காலம் வந்துழி எல்லாரும் இவ்வூனுடம்பை விட்டுச் சொல்பவர்களே யல்லாமல் நிலையாக இங்கிருப்பவர் எவருமே இலர். எல்லாரும் ஒரு முழுமுதற் கடவுளாற் படைக்கப் பட்டு அவனருளைப் பெறுதற்காக, அந் நிலவுலகமாகிய கல்விக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/313&oldid=1592105" இலிருந்து மீள்விக்கப்பட்டது