உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

வெள்ளிப் பரவை விளக்கநாடு வேபதித்த ஒள்ளரக்கு மாமணிஎன் றோது.

உருவ நீனிறக் கடலகங் கீண்டெழுந் தோங்கித் திருவி னீள்பிரித் தானியா தோன்றிய ஞான்று பெருமி தத்துடன் பீடுறும் இறைபடைப் பார்ந்தே, உருமினார்த்தனர் தேவர்கள் உயர்விறற் பாடல். வாழ்க நீள்பிரித் தானியா; ஆட்படா தென்றும் ஆள்க நீள்பிரித் தானியர்

அனைத்துல கொருகுடைப் படுத்தே!

அப்பாத்துரையம் - 41

ஷேக்ஸ்பியர்.

(நாட்டுரிமைப் பாட்டு) ஜேம்ஸ் தாம்ப்ஸன்.

17. அரசாங்கம்

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.

திருவள்ளுவர்.

மக்கள் தேவைக்காக, மக்களின் அறிவு வகுத்துக்கொண்ட வகைமுறையே அரசு.

எட்மண்ட் பர்க்.

று

நம் தேவைக்கு மேற்பட்ட அரசியல் இயந்திரத்தை வைத்துக் கொண்டு, நாம் இன்னலுறுகிறோம் என்று எனக்குத் தோற்றுகிறது. உழைப்பவர் உழைப்பை இவர்கள் பெரிதும் உறிஞ்சி விடுகின்றனர்.

ஜெஃவ்வெர்ஸன்.

மக்கள் விருப்பமே எந்த அரசாங்கத்திற்கும் உரிய நேர்மை யுரிமை ஆகும். ஆகவே மக்கள் சுதந்தர உரிமையைப் பாதுகாப்பதே அதன் முதற் கடமையா யிருக்க வேண்டும்.

ஜெஃவ்வெர்ஸன்.