உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

25

செய்வதாக உணர்வது கிடையாது. அவன் செய்வதெல்லாம் ஒரு 'கொள்கை' யுடன்தான்! அவன் போராடுவதெல்லாம் நாட்டுப்பற்றுக் கோட்பாட்டினாலேயே; அவன் சுரண்டுவ தெல்லாம் தொழில் முறைக் கோட்பாட்டினாலேயே அவன் அடிமைப் படுத்துவதுகூட, ‘பேரரசாட்'சிக் கோட்பாட்டுக்கு இணங்கியே!

பெர்னார்டு ஷா.

சமயத்தையும் ஒழுக்கக் கேட்டையும் தவிர, இங்கிலாந்தில் பாழுது போக்கு எதுவும் இல்லை - எவ்வளவு வருந்தத்தக்க நிலை!

ஸிட்னி ஸ்மித்.

ஆங்கிலேயன் வழக்காற்றில், 'நாகரிகத்தில் பிற்பட்ட நாடுகள்' என்றால், அவன் நாட்டினிடமிருந்து 'வாணிகச் சரக்குகள் பெறாத நாடுகள்' என்று பொருள்.

டக்ளஸ் உட்ரஃவ்.

என் தாய்நாடு யாதாயினும் ஆகுக; என்ன குறை டைய தாயினும் ஆகுக. எப்படியும் அது என் தாய்நாடே.

சார்லஸ் சர்ச்சில்.

நாட்டுணர்ச்சி என்பது மனித வகுப்பின் ஒரு குழந்தைப்

பருவ நோய் அது ஒரு கூவை வீக்கம் போன்றது.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரும் நாடு.

ஆல்பெர்ட் ஈன்ஸ்டீன்.

மன்னர் திருத்தவிசு; மன்னுசெங்கோல் வாழரங்கம்;

திருவள்ளுவர்.

துன்னும் உயர் தோற்றத் திருவிடம்; மால்- மின்னுசெவ்வாய்க்

கோளிருக்கும் கோயில்; குறைவறநற் சீரியற்கை

வேளிருக்கும் கோட்டை விறல்மாடம்;- நாளிருக்கும்

தீங்குகள் வாராநீர்சேர் திரையே எம்நாடு,

பாங்குயர் வீரர் பயில்மரபின் - ஓங்குமனை;