உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

6

291

பிறந்தவராயிருப்பினும், அவரெல்லாஞ் சைவ சமயத்தவரோடு கலக்கப் பெறுதற்கும், அவரால் வணங்கப் பெறுதற்கும் உரியாரென்பதற்குப் பல்வேறு வகுப்பினராய் அறுபத்துமூன்று நாயன்மாரும் அவர்தம் உண்மை வரலாற்றினைக்கூறுந் 'திருத்தொண்டர் புராணமுமே' உறுபெறுஞ் சான்றாமென்று தெளிக. பிறவியெடுத்தது அன்பு அருள் அறங்களில் ஓங்கி ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று இறைவன் றிருவடிப் பேரின்பத்தைப் பெறுதற்கே யல்லாமல், நிலையிலா ஊன் பிறவியின் உயர்வு தாழ்வுகளைச் செருக்குடன் பாராட்டி அறியாமையில் மாய்ந்தொழிதற்கு அன்று என்பதை வேளாளரும் பிறருந் தமது கருத்திற் பதித்து, எல்லாரும் ஒரு முழுமுதற் கடவுளாகிய தந்தைக்குப் புதல்வராதலை யுணர்ந்து, அதற்கேற்றவாறு இனிது ஒழுகி, அத் தந்தையின் வீடுபேற்றின்பப் பெருஞ் செல்வத்தை எய்துதற்கு முயலல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/316&oldid=1592120" இலிருந்து மீள்விக்கப்பட்டது