உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.

31

திருவள்ளுவர்.

சட்டங்கள் தனி நிகழ்ச்சிகளை எண்ணிச் செய்யப்பட

வில்லை. பொதுவாக மனித இனத்தை எண்ணியே.

ஒரு பெரியார்.

வீடுகள் ஒன்றை ஒன்று சார்ந்தே நிலைபெறுவது போல், சட்டங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே நிற்கின்றன.

எட்மண்ட் பர்க்.

சட்டங்கள் நூலாம்படை போன்றன. குளவி முதலிய பேர் இனங்களை ஊடாடவிட்டு, சிறிய ஈ, கொசுகு ஆகியவற்றை அகப்படுத்திக் கொள்ளும்.

ஜோனதன் ஸ்விஃப்ட்.

சட்டம் கண்டிப்பான வரையறையில்லாமலிருப்பதே

அதன் மாபெரும் புகழ் ஆகும்.

(விருந்துரை) திரு. வில்பிரகன்.

நல்ல சட்டங்கள் வகுப்பது எளிது; அருமையாவது அவற்றை நடைமுறையில் வெற்றிபெற நடத்துவதில்தான் இருக்கிறது.

வைக்கவுண்ட் பாலிங்புரோக்.

ஒருவன் எத்தனை உயர்வுடையவனாயினும், சட்டம்

அதனினும் உயர்வு உடையதே.

தாமஸ்ஃவுல்லர்.

சட்டங்கள் மிகவும் மென்மை யுடையவையாயிருந்தால் அவற்றுக்கு யாரும் கீழ்ப்படிய மாட்டார்கள். அவை மிகவும் கடுமையுடையவையாய் இருந்தால் பெரும்பாலும் நிறை வேற்றப் படுவதில்லை.

ஃவாங்க்லின்.

கேடுள்ள, வெறுப்பூட்டத்தக்க சட்டங்களை ஒழிக்க வேண்டுமானால் அவற்றை வழுவற நிறைவேற்ற வேண்டும். அதனினும் சிறந்த வழி காண முடியாது.

யுனிஸல் எஃகிரான்ட்.