உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

51

முழுநிறை அறிவு நாற்கூறுடையது. அவையே அறிவு அதாவது நேர்மையான செயல் செய்யும் ஒழுங்கு முறை; நேர்மை, அதாவது தனி வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் ஒப்ப நடக்கும் நிலை; வீரம், அதாவது இடர் கண்டு விலகாது ஏற்றல்; தன்னடக்கம், அதாவது அவாவை அடக்கி வழிப்படுத்தல்.

பிளேட்டோ.

மெய்யறிவர் உள்ளம் பளிங்கு போன்றது. அது வானகத்தின் ஒளியை ஏற்ற நமக்குத் தருகிறது.

33. அன்பு

ராஷ்ஃபூகால்டு.

அன்பு தானே கொடுக்கும், தன்னையே கொடுக்கும்; ஆனால் அதை விலைக்குப் பெற முடியாது.

லாங்ஃவெல்லோ.

அன்பிலார் எல்லாந் தமக்குரியர், அன்புடையார்

என்பு முரியர் பிறர்க்கு.

திருவள்ளுவர்.

நாம் எதில் அன்பு செலுத்துகிறோமோ, அதுவே நம்மை உருவாக்கி நம் பண்பாயமைகிறது.

கெதே.

அன்புக்கு அழிவு இல்லை; அன்புக்குரியவர் அதனை ஏற்கா விட்டால்கூட, அன்பு செய்பவரிடமே அது மீண்டு அவரைச் கனியச் செய்து தூய்மைப்படுத்தி உயர்வுறுத்தும்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.

வாஷிங்டன் இர்விங்.

திருமூலர்.

அன்பு கடவுளின் வடிவுரு; உயிரற்ற உருவன்று, உயிருடைய உரு; கடவுளியல்பின் நிறைநலப் பண்புகளின் உயிரியங்கும்

வடிசாற்றின் சாயல் அது.

மார்ட்டின் லூதர்.