உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

73

செல்வம் இன்பத்தை விலைக்குப் பெற முடியாது. ஆனால், அதனைக் கொண்டு மனிதன் துன்பத்தை விலைக்கு வாங்கக் கூடும்.

மைக்கேல் ஆர்லென்.

செல்வப் பற்றே, தீமைகள் எல்லாவற்றுக்கும் வேர்முதல்.

தூயதிரு. பால்.

மிகுதியாகப் பொருளீட்டும்படி என்னை நானே வற்புறுத்த விரும்பினேன். ஆகவே, மிகுதியாகச் செலவிடத் தொடங்கினேன். ஜேம்ஸ் அகேட்.

செல்வத்தை மட்டும் திரட்டிவிடு; உலக முழுவதும் சேர்ந்து

உன்னை ஒரு பண்பாளன் என்று கூறத்தயங்காது.

பெர்னார்டு ஷா.

தன் தேவைக்கு மேற்பட மனிதன் மிகுதியாக ஈட்டுந் தோறும், கவலை அவனைப் பிடித்துத் தின்னத் தொடங்கி விடுகிறது.

பெர்னார்டு ஷா.

மற்ற மனிதர்களெல்லாம் பணத்திற்காக இவ்வளவு பேயாய் அலையாதிருந்தால், எந்தத் தனி மனிதனும் பணமில்லாமல் எவ்வளவோ அழகாக வாழ்க்கை நடத்திவிட முடியும்.

மாகரேட் கேஸ்ஹரிமன்.

வேறு எந்த நற்பரிசுக்கும் தகுதியில்லை என்று கண்ட பின்னர் அத்தகுதியற்ற மனிதனுக்கே கடவுள் பொருளைத் தருகிறார்.

தலூர்.

ஊசியின் காதில் ஒரு தேர்வடத்தைப் புகுத்தினாலும் புகுத்தலாம்; செல்வரை வானுலக முய்க்கும்படி செய்தல் அரிது.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.

மறைத்திரு. மாத்யூ.

திருவள்ளுவர்.