உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 41

சொகுசாக இறப்பதற்கு எவ்வளவோ பணம் பிடிக்கிறது.

ஸாமுவேல் பட்லர்.

ஐய, (நீங்கள் கோருகிறபடி) எனக்குப் பொருளுதவி செய்தவர்கள் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாமைக்கு ரண்டு காரணங்களுண்டு; ஒன்று அப் பட்டியலை நான் தொலைத்து விட்டேன்; மற்றொன்று அப்பணமும் செலவாகிப் போய்விட்டது.

செல்வமனைத்தும் உழைப்பின் விளைவே.

அறிஞர் ஜான்ஸன்.

லாக்.

47. வசையுரை

அரசியல்: டாலிராண்டு குறித்து

இவரிடம் பழைய ஆட்சியின் பழிப்பண்புகள் ஒன்று விடாமல் உள்ளன. அதே சமயம் புதிய ஆட்சியின் நற்பண்பு களுள் ஒன்றுகூட அவரிடம் இடம் பெறவில்லை.

கார்னோ.

திருவருட் பரம்பரை : எக்ஸிட்டர் தலைமகளைக் குறித்து:

திருவருட்பரம்பரை பற்றி நான் இப்போது நம்பி ஆக வேண்டியிருக்கிறது. ல்லாவிட்டால், ஜூடாஸ் இஸ்காரி யட்டின் பரம்பரையில் இப்போதும் ஒரு எக்ஸிட்டர் தலை மகள் எப்படி ஏற்பட முடியும்?

புது முயற்சி வீரம் :

புது முயற்சி வீரனாகயிருக்க விரும்பாதே! தொடக்கக் காலப் புதிய கிறிஸ்தவர்தான் கோளரிகளுக்கு ரையாக வேண்டி யிருந்தது. மலைகடந்து செல்ல விரும்புவோர் நாடுவது (புதுப் பாதையல்ல) கழுதைகளும் கோவேறு கழுதைகளும் நடந்து சென்று தேய்பட்ட பாதைகளையே. அத்தகைய வற்றையே நீ நாடு.

தூய்மைமிகு திரு. டப்ள்யூ. ஆர். இங்க். டி. டி. ஜெர்மானிய தத்துவ அறிவர்: