உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 41

கிங்ஸ்லி ஒரு சமய அறிஞர் என்று புரூடு நினைத்து

விட்டார்.

புரூடின் நூல்கள் வரலாறுகள் என்ற கிங்ஸ்லியும் கருதிக் கொண்டார்!!

அறிஞர் வில்லியம் ஸ்டப்ஸ்

வரலாற்றை நையாண்டி செய்து ‘பிரலு' க்கு வாடிக்கை யாய் விட்டது; ‘பிரலை' நையாண்டி செய்வதும் வரலாற்றுக்கு ஒரு வேடிக்கையாயிருப்பது உறுதி. (பிரல் என்பவர் பற்றி)

ஈ.பி. ஆஸ்பார்ன்

ஓரரசன் இரக்க உணர்ச்சியுடையனாக இருந்தால், அவன் ஆட்சி ஒரு முழுத் தோல்வியாகவே இருக்கும்.

முதலாம் நெப்போலியன்

வரலாற்றின் படிப்பினைகளை மனிதர் படித்துக் கொள்வ தில்லை என்பதே வரலாற்றிலிருந்து நாம் படிக்கத்தகும் படிப்பினை ஆகும்.

ஹெகெல்.

கட்டுக் கதையிலுள்ள கதைப் பொருத்தப் பண்புகூட இல்லாத கட்டுக் கதைத் தொகுதியே வரலாறு.

ரஸல் கிரீன்.

அந்தோ வரலாற்றைப் படிக்காதீர்! அது என்றும் பொய்யாக வே இருக்கும்.

ஸர் ராபர்ட் வால்போல்.

வரலாறு படிக்காதே, வாழ்க்கை வரலாறுகளே படி. ஏனெனில் இவைகளே ஊகக் கோட்பாடுகளற்ற வரலாறுகள் ஆகும்.

பெஞ்சமின் டிஸ்ரெய்லி.

என்றும் நடைபெற்றிராத செய்திகளைப்பற்றி அவற்றுக் குரிய காலத்தில் வாழ்ந்திருக்க முடியாத ஒருவர் எழுதி வைத்த கற்பனை - இதுதான் வரலாறு!

ஒரு பெரியார்.