உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அப்பாத்துரையம் – 43

எளிய வாழ்வாகிய இந் நடுநிலை வாழ்வைப் பெறும் வழி ஊதாரித் தனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் இடைப்பட்ட நற்சிக்கன வழியாகும்.

உயர்வுடைய நல்லுணவு, நல்லாடை, நற்கலைகள், நல்வாய்ப்புகள் ஆகியவற்றுக்குத் தேவைப்பட்ட அளவும், உன் திறத்துக்கேற்ற அளவும் செலவிடு. இதில் தயக்கம் கொண்டு குறையறிவாளனாகாதே. ஆனால், அதே சமயம் இவற்றின் உயர்வுக்குப் பயன்படாமல் வீண் செலவாக, அல்லது வீண் ஆரவாரமாக ஒரு காசும் செலவு செய்யாதே. மேலும் தற்காலிக மகிழ்ச்சி கருதி, சொகுசு கருதி, நிலையான நலங்களை அல்லது இன்பங்களைப் போக்கிக் கொள்ளாதே. தற்காலிகமாகச் சிறு துன்பங்களை வெறுத்து நிலையான தீங்கை அல்லது துயரை வருவித்துக் கொள்ளாதே.

இளைஞர் பெரும்பாலும் இன்பம் என்று கருதி ஏமாறுவது துன்பந்தரும் தற்காலிக இன்பங்களையே. அவர்கள் பெரும்பாலும் வெறுப்பதும், நன்மருந்துகள் போலத் தற்காலிகமாகச் சிறிது இன்னாத்தோற்றம் தந்து நிலையான பயன் தரும் உடலுழைப்பு, முயற்சி, பொறுமை முதலிய நற்பண்புகளையே. எளிய வாழ்வில் ஊன்றி நிற்பதாலும், தன்நிலைக்கும், நிலைக்குரிய வருவாய்க்கும் உட்பட்டு வாழ்வதாலும் இத்துன்பங்களைப் பெரும்பாலும் விலக்கிவிடலாம்.

தானுழைத்துத் தற்சார்புடன் வாழ்வதற்கு அடுத்தபடியான உயர்வுடையது, உழைப்பார்க்கு உதவுவதேயாகும். பயனை எதிர்பாராத உதவி என ஒழுக்க நூலார் உயர்வுபடுத்திக் கூறிய உதவி இதுவன்றி வேறு எதுவுமன்று. பயனை எதிர்பாராத உதவி என்றவுடன் பலர் பயனற்ற உதவி என்றெண்ணிப் பொருளை எவருக்கேனும் கொடுத்துவிடுவது கொடை என்றும், கல் முகட்டிலும், ஆற்றிலும், குளத்திலும் நற்பொருளைக்கொட்டுவது நற்செயலென்றும் எண்ணிவிடுகின்றனர். அதேபோல வரையாது கொடுத்தல் என்பது எந்த வீணர் எது கேட்டாலும் கொடுப்பது

என்று கொள்கின்றனர்.

வை கொடையுமாகா,

நன்னடையுமாகா என்று வாதிட்டு விளக்கத் தேவையில்லை. பகட்டுக்காகச் செலவு செய்யும் வீணர் செயலே தவறானால், அந்த அளவு சிறு நோக்கங்கூட இல்லாத மடமைமிக்க இச்