நல்வாழ்வுக் கட்டுரைகள்
111
முழு மலர்ச்சிக்குப் பிற்பட்ட தனிமனிதன் வாழ்வே மனிதன் தனிவாழ்வு என்று சிறப்பாகக் கூறக்கூடியது. இதில் மனிதன் சமூகமரபில் நின்றியங்கினாலும், அவ் வெல்லை கடந்து வளர்ச்சி பெறுகிறான். சமூகத்தைவிட்டுமனிதன் பிரியும்போது, அவன் தன் பிள்ளைகள் மூலம் தன் உடல் மரபுப் பண்பைத் தன் பின்னோர்களுக்கு விட்டுச் செல்கிறான். தன் அறிவுப் பண்பை அவர்கட்கும் சமூகத்திற்கும் விட்டுச் சென்று, புதிய சமூகத்தை ஆக்கும் மரபில் பங்கு கொள்கிறான். ஆகவே, தனி மனிதர் வாழ்வின் அடிப்படையிலேயே சமூகம் வளர்ச்சியடைகிறது என்னலாம். தனிமனிதன் வாழ்வுக்கு மூலதனமாயமையும் சமூக வாழ்வு, அதனினின்றும் ஈட்டப்பெற்ற தனி மனிதன் வாழ்வாகிய புதிய ஆதாயத்திருந்து சேமிக்கப்படும் வாழ்க்கைப் பயனென்னும் சிறு சேமிப்பு மூலமே வளர்ச்சி பெற்று, உயிர்ப் பண்பாய் உலவுகிறது. தனிமனிதரைச் சமூகம் தன் பண்பு கடந்து வளரச் செய்யவில்லையானால், அச் சமூகம் வளராது; உயிருடன் உலவாது; அது படிப்படியாகத் தேய்வுற்று அழிவது உறுதி.
“தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது"
என்று அறிவு நூல் வகுத்தது இதனாலேயே யாகும்.
(குறள் 68)
தனிமனிதன் சமூகத்துக்கு அளிக்கும் புது மரபுப் பண்பே புகழ் ஆகும். இது பலர் பாராட்டுவதனால் மட்டும் ஏற்படும் வெற்றுப் புகழ் அன்று. பண்பும் பயனும் அறிந்து அறிஞர் பாராட்ட,அவர் வழி நின்று அவற்றைக் கண்டு மக்கள் பாராட்டும் பண்புடைப்புகழே. இதனாலேயே 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்ற தொல்லோர் உரையும் எழுந்துள்ளது. உலகம் என்று இங்கே கூறப்படுவதும் அறிஞர், சான்றோர் என்று கூறப்படுவதும், சமூக வளர்ச்சியின் பழங்காலம், தற்காலம், வருங்காலம் எனும் முக்காலப் போக்கும் நுனித்துணர்ந்த மூதறிஞரையே.
முழுமலர்ச்சிக்குப் பின்னரே மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினன் ஆகிறான் என்பது கவனிக்கதக்கது. இப்பருவம் வரை இன்றும் மனிதர் தம் செயலுக்கு பொறுப்பு வகிப்பதில்லை. அவர்கள் செயலுக்கு அவர்கள் தாய் தந்தையர், குடும்பத்தார்,